• :
  • :
களத்தில்

புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில்

 புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில்

 வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 7 புதிய பறவையினங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 89 வகையான பறவை இனங்கள் உள்ளன. அதில், உள்ளூர் பறையினங்கள் 61 மற்றும் அயல்நாட்டு பறவையினங்கள் 28 என மொத்தம் 1,604 என்ற எண்ணிக்கையில் பறவைகள் உள்ளன.  இவை அனைத்தும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
 
 
`ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி’, `கேட்டிலைனா பஞ்சவர்ண கிளி’, `ஹர்லிகுயின் பஞ்சவர்ண கிளி’, `சீவர் பஞ்சவர்ண கிளி’, `டஸ்கீ பாய்னஸ்’, `ரூபெல்ஸ் கிளி’ `அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’. இப்பறைவகள் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுபவையாகும். இந்தப் பறவைகள் சென்னையில் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவை ஆரோக்கியமாக நிலையில் உள்ளதால் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளின் வண்ண நிறங்கள் மற்றும் தனித்துவமான குரல் பார்வையாளர்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.