• :
  • :
களத்தில்

ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

 அரியலூரில் தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் சிலால் அருகே அரசு விரைவுப் பேருந்து சென்னையை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி காலியாகச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கும்பகோணம் - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
 
விபத்தில் உயிரிழந்தவர் பாபநாசத்தைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா என்பது தெரியவந்தது.  ஆபத்தான நிலையில் ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுளார். விபத்தில் காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.