• :
  • :
களத்தில்

தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்!

தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு  - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்!

 குளித்தலைப் பகுதியில் அவசரக் காலத்தில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் 108 ஆம்புலன்ஸின் நிலை படுமோசமாக இருக்கிறது" என்று புலம்புகிறார்கள் அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள். 

 
கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. இந்த நகராட்சியைச் சுற்றி எண்ணற்ற கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏதேனும் நேர்ந்து, மருத்துவமனைக்கு வர வேண்டி இருந்தால், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் 108 ஆம்புலன்ஸையே அழைக்கும் நிலை. மேற்கொண்டு நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், ``இங்கு மக்களுக்கு ஏதேனும் விபத்தோ அல்லது ஏதோ பிரச்னை ஏற்பட்டால், குளித்தலை அரசு மருத்துவமனைக்குத்தான் 108 ஆம்புலன்ஸில் கொண்டு வர வேண்டும். சிக்கலான நேரங்களில் 50 கிலோ மீட்டர்கள் உள்ள கரூருக்குத்தான் கொண்டு போகணும். ஆனால், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிற்கும் ஆம்புலன்ஸ் எப்போ மக்கர் பண்ணும்ன்னே தெரியாது. அடிக்கடி நடுரோட்டுல நின்னுக்கிட்டு, நோயாளிகளையும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் கடுப்பாக்குது. சமீபத்தில், அப்படிதான் அவசரமாக ஒரு கிராமத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் கேட்டு போன் வர, டிரைவர் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு பயணிக்க முயன்றார். 
 
ஆனால், அப்போது பார்த்து ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ண, அங்கே இருந்த நாலைந்து ஊழியர்களை வைத்து ஆம்புலன்ஸை தள்ள வைத்து நோயாளிகளை ஏற்ற ஆம்புலன்ஸை எடுத்துப் போயிருக்கிறார்கள். குளித்தலைப் பகுதி முக்கிய போக்குவரத்து பகுதி. காவிரிக் கரையோரம் சாலை இருப்பதால், சாலை பெரும்பாலும் குறுகலாக இருக்கிறது. இதனால், இங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுது. ஆனா, ஆம்புலன்ஸ் இப்படி மக்கர் பண்ணும் நிலையில் இருக்கு. அதோடு, இந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அதிகம் இருக்கும்னு பீதி கிளம்பி இருக்கு. ஆனால், அவர்களுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்து உதவக்கூடிய 108 ஆம்புலன்ஸ் இந்த லட்சணத்தில் இருந்தா எப்படி. உடனே இந்த ஆம்புலன்ஸை சரிபண்ணனும். இல்லைன்னா, புது ஆம்புலன்ஸை வாங்கி நிறுத்தனும். இல்லைனா போராட்டம் பண்ணுறத தவிர வேற வழியில்ல" என்றார்கள்.