img/728x90.jpg
ஹோட்டல் உணவு ஒவ்வாமை - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி!

ஹோட்டல் உணவு ஒவ்வாமை - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி!

 கவிஞர் வைரமுத்து, உணவு ஒவ்வாமையின் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு உயர்ந்த விருதுகளை வாங்கிய திரைப்படப் பாடலாசிரியரும் இலக்கியவாதியுமான கவிஞர் வைரமுத்து, சமீப காலத்தில் ஆண்டாள் விவகாரம், பாடகி சின்மயியின் மீ டூ குற்றச்சாட்டுகளால் கவனிக்கப்பட்டுவந்தவர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அமைதி காத்துவந்தவர், 'தான் ரொம்பவும் அவமானப்படுத்தப்பட்டுவருகிறேன்' என பொதுவாகக் கூறிவிட்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் மிகவும் அமைதியாக இருந்துவந்தார்.
 
இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருக்கும் சொந்த ஊருக்கு வந்தவர், குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார். பின்னர், மதுரை பசுமலையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்றிரவு அவர் உட்கொண்ட உணவு ஒத்துக்கொள்ளாததால், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில், உடனே மதுரையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவர் நலமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. 'அவர் உடல் நலம் தேறிவிட்டார், இன்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.