img/728x90.jpg
தமிழக அரசியலின் சீனியர்குறித்து பரவும் பெர்சனல் ஆடியோ

தமிழக அரசியலின் சீனியர்குறித்து பரவும் பெர்சனல் ஆடியோ

தமிழக அரசியலில் சீனியரும், பிரதானமான பொறுப்பிலும் இருப்பவர் அவர். சில நாள்களுக்கு முன், அவர் தொடர்பான ஒரு தகவல் பரவியது. இளம் பெண்ணுடனான அந்த சீனியரின் பழக்கம் மற்றும் நெருக்கம் பற்றியதுதான் அந்தத் தகவல்.  இப்போது அந்த விவகாரம் தொடர்பாக, பெண் ஒருவரிடம் அந்த சீனியர் பேசுவதாக ஆடியோ பதிவு ஒன்று  உலா வருகிறது. அந்த ஆடியோ பதிவில், தனது மகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து அந்தப் பிரமுகரைத் தொடர்புகொண்டு பேசுகிறார் ஒரு பெண். இதுகுறித்து தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி கூறுகிறார் சீனியர். மற்றொரு பதிவில், இருவருக்கும் இடையே நீளமான உரையாடல் தொடர்கிறது. அதில், சிபாரிசு செய்யச் சென்ற இடத்தில் இப்படி ஆகிவிட்டது. எனது உறவினர்கள் என்னை அடிக்கின்றனர். என்ன செய்வது எனத் தெரியவில்லை எனப் புலம்புகிறார் அந்தப் பெண். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என  விசாரிக்கிறார் சீனியர்.  யாரிடமும் எதுவும் கூற வேண்டாம். தனியாக வாருங்கள் நேரில் சந்தித்துப் பேசிக்கொள்ளலாம். உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வாருங்கள் பேசிக்கொள்ளலாம். நேரில் வாருங்கள் விரிவாகப் பேசிக்கொள்ளலாம் என்றெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல சீனியர் பேசுகிறார். 
 
ஆடியோ பதிவுடன் ஒரு அரசாங்கச் சான்றிதழும் பரவிவருகிறது. தமிழக அரசியலில் இது என்னவிதமான புயலைக் கிளப்புமோ?!