• :
  • :
களத்தில்

தி மு க கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி கமலின் தகவலால் காங் மேலிடம் வியப்பு

தி மு க கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி கமலின் தகவலால் காங் மேலிடம் வியப்பு

 தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி கமலின் தகவலால் காங்., மேலிடம் வியப்பு

 
லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, காங்., தலைமையில், மக்கள் நீதி மையம், மார்க்சிஸ்ட், பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்தால், 30 தொகுதிகளை கைப்பற்றலாம்' என, காங்., தலைவர்களிடம், கமல் கூறியுள்ளார்.
 
தி.மு.க., கூட்டணி,புதிய அணி, கமல்,தகவல், காங்.,வியப்பு
 
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு, ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க.,விரும்புகிறது.ஆனால், இரட்டை இலக்கத்தில், 'சீட்'களை பெற வேண்டும் என்பதில், தமிழக, காங்., தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
 
குற்றச்சாட்டு
 
இந்நிலையில், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல், 'தி.மு.க., கூட்டணியில், காங்., இருக்காது; கருணாநிதி அனைவரையும் மதிக்க தெரிந்தவர்' என்றார். இதன் வாயிலாக, 'ஸ்டாலின் யாரையும் மதிக்க மாட்டார்; அரவணைத்து செல்ல மாட்டார்' என, கமல் மறைமுகமாக குற்றம் சாட்டினார். அத்துடன், தி.மு.க., அணியிலிருந்து, காங்கிரசை வெளியேற்றி, அக்கட்சியின் தலைமையில், புதிய அணியை உருவாக்கவும், கமல் வியூகம் வகுத்துள்ளார். 
 
இதன்படி, காங்கிரசுக்கு, அவர்கள் விரும்பும், 15 தொகுதிகளை கொடுப்பது;மீதமுள்ள, 25 தொகுதிகளை, மக்கள் நீதி மையம்,
 
மார்க்சிஸ்ட் - பா.ம.க., - அ.ம.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பங்கிட்டு கொள்வது என்பது, கமலின் கணக்கு. இந்த கணக்கிற்கு, காங்கிரஸ் சம்மதித்தால், அக்கட்சி தலைமையில் அமையும் கூட்டணியால், 30 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என, கமல் நம்புகிறார். இந்த விபரத்தை, காங்., செய்தி தொடர்பாளர்களான, ஜெய்ராம் ரமேஷ், மணிஷ் திவாரி, கே.ராஜு ஆகியோரிடமும் தெரிவித்து உள்ளார்.
 
கமல் மேலும் கூறியதாவது:
 
நானும், ரஜினியும் சேர்ந்தால், மற்ற கட்சிகள் வெற்றி பெறமுடியாது. நாங்கள் சேர்ந்து செயல் படுவது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் இருவருக்கும், தமிழக மக்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளது.ஜெ., - கருணாநிதிக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க.,வில் நேரடி போட்டிக்கு, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை. 
 
எனவே, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,- காங்., மத்தியில் தான் போட்டி நிலவும். மத்திய அரசுக்கு எதிரான ஓட்டுக்களை, காங்., அணியால் தான் அறுவடை செய்ய முடியும்.அ.தி.மு.க., - தி.மு.க.,வை, மக்கள் கண்டுக்கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே, தி.மு.க., அணியில்இருந்து, காங்கிரஸ் வெளியேறி, புதிய அணியை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
 
அதிர்ச்சி
 
லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும் என நினைக்கும் ராகுல் மற்றும் காங்., தலைவர்களுக்கு, கமல் கூறியுள்ள தகவல், அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 
15 சீட்டுகள்
 
இதற்கிடையில், அடுத்த மாதம், அறிவாலயத்தில்,
 
கருணாநிதி சிலையை திறக்க, சோனியா வுக்கு, ஸ்டாலின் தரப்பில் அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது. சிலை திறப்பு விழாவிற்கு, சோனியா வரும் முன், கமலின் புதிய அணி திட்டத்தை மையப்படுத்தி, தி.மு.க., கூட்டணியில், 15 சீட்டுகளை பெறுவதற்கான பேச்சு நடத்த, காங்., தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இவ்வாறு, காங்., வட்டாரங்கள் கூறின.
 
25ல் ஸ்டாலின் ஆலோசனை
 
தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை, தி.மு.க., நேற்று முன்தினம் அறிவித்தது. ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு பொறுப் பாளர்கள் வீதம், மொத்தம், 80 பேர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும், 25ம் தேதி நடக்கிறது. 
 
இதில், தி.மு.க., தலைமையில், எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர் களிடம் ஸ்டாலின் கருத்து கேட்க வுள்ளார். மேலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நிதி வசூலிப்பது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.