• :
  • :
களத்தில்

திருப்பூரில் நைஜீரியாவைச் சேர்ந்த 9 பேர் கைது!

திருப்பூரில் நைஜீரியாவைச் சேர்ந்த 9 பேர் கைது!

 திருப்பூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் 9 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. 

 
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இன்று காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரியபாளையம் என்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த நைஜீரியர்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாகப்  பேசவே, காவல்துறையினர் அவர்களிடம் விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்களை காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு அனைத்து ஆவணங்களும் தாங்கள் தங்கியுள்ள இடத்தில் இருப்பதாகக் கூறிய நைஜீரியர்கள், அங்கு வந்தால் காண்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரையும் வாகனத்தில் ஏற்றிய காவலர்கள், அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனையிட்டனர். அதில் அந்த 9 நைஜீரியர்களிடமும் முறையான விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை இல்லை என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணையை நடத்திய காவல்துறையினர், பின்னர் உரிய ஆவணங்கள் வைத்திருக்காத பிளெசிங்கு, சென்னெடு, டெய்க், வின்சென்ட் , கெச்கூவ் , உகாச்கூவ், ஸ்டிபன் ஜோனாதம், சக்கூவ்மேகா, சென்னெடு ஆகிய 9 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிபதியின் முன்பாக ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், அதைத்தொடர்ந்து புழல் சிறைக்கு அவர்களை அழைத்துச் சென்று அடைத்தனர்.