• :
  • :
களத்தில்

தெ புதுக்கோட்டை மணல் குவாரியில் நிபுணர்குழு ஆய்வு - கலக்கத்தில் பினாமிகள்

தெ புதுக்கோட்டை மணல் குவாரியில் நிபுணர்குழு ஆய்வு - கலக்கத்தில் பினாமிகள்

 தெ.புதுக்கோட்டை மணல் குவாரியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர்குழு ஆய்வு மேற்கொண்டது. இதனால் மணல் குவாரி பினாமிகள் கலக்கத்திலும், கிராம மக்கள் விடிவு காலம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை கிராமத்தை ஒட்டிய  வைகையாற்றில் அரசுப் பொதுப்பணித்துறை மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து சூடியூர் மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்றார்.
 
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி டாக்டர்.மோகன் (சென்னை ஐஐடி) தலைமையில் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் கணபதிசுப்பிரமணியம் ஜியாலஜிகல் சயின்டிஸ்ட் புகழ் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு சூடியூர் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதையடுத்து சூடியூரில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சூடியூர்
தெ. புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் பொதுமக்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணல்குவாரி அமைத்தால் தங்களது விவசாயம், குடிநீர் ஆதாரம் ,வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்பதை நிபுணர்குழுவிடம் எடுத்துக்கூறினார்கள் .நிபுணர் குழுவினர் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் கீழப்பெருங்கரை தடுப்பணை உடைந்து கிடப்பதையும் நேரில் பார்வையிட்டனர்.
 
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோவிந்தன், ஒன்றுபட்ட ராமநாதபுரம் ஜில்லா பூர்வீக வைகைப் பாசன  விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மலைச்சாமி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் இராம.முருகன், சூடியூர் மணிமாறன், ஜனார்த்தன், பரளை ராமு தெ.புதுக்கோட்டை ராமு , ராமச்சந்திரன், சிங்கப்பெருமாள், முத்துராமலிங்கம் பார்த்திபனூர் சம்சுதீன், சாதிக் ஆகியோர் கலந்துகொணடனர். மேலும் நிபுணர்குழுவுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள், சுரங்கத்துறை உதவி இயக்குநர், மானாமதுரை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.