• :
  • :
களத்தில்

இடுகாடு பிரச்னைக்கு தீர்வு கோரும் கிராம மக்கள்

 இடுகாடு பிரச்னைக்கு தீர்வு கோரும் கிராம மக்கள்

 இடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லாததால் விவசாய விளைநிலங்களில் வழியாகச் சடலம் எடுத்துச் செல்லப்படும் அவலம்.

 
கடலூர் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கான இடுகாடு அருகில் உள்ள மலட்டாற்றில் உள்ளது. இடுகாட்டுக்குச் செல்ல தனிப் பாதை இல்லை, இதனால் விவசாய விளைநிலங்கள் வழியாக இறந்தவர்களின் சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விளைநிலங்களில் சாகுபடி செய்திருக்கும் நேரங்களில் அவ்வழியாகச் சடலத்தை எடுத்துச் செல்லும்போது விளை நிலங்களில் உள்ள பயிர்கள் அழியும் நிலை ஏற்படுகிறது.
 
 
இதனால் ஒரு சில நேரங்களில் நிலத்தின் உரிமையாளருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராம மக்கள் இடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரக்கோரி பல முறை அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், இன்று மீண்டும் கிராம மக்கள் இடுகாட்டுக்குப் பாதை அமைத்து தரக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனிடம் மனுக்கொடுத்தனர்.