• :
  • :
களத்தில்

சி பி ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்

சி பி ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்

 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் நேரில் சந்தித்து விளக்கமளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 
அலோக் வர்மா - ராகேஷ் அஷ்தானா
 
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த ஒரு மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ அமைப்பு நிலைகுலைந்து போயுள்ளது. லாலு பிரசாத் வழக்கு உட்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுகிறார். அந்த வழக்குகளின் விசாரணையை முடக்க அலோக் முயல்கிறார்" எனக் கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியதுடன் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கடிதமும் எழுதியிருந்தார் ராகேஷ் அஸ்தானா. பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அலோக் வர்மா, ``அஸ்தானா மீது ஆறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் திசை திருப்பவுமே அவர் என் மீது புகார் கூறுகிறார். அதில் உண்மையில்லை" எனக் கூறினார். 
 
 
அதேசமயம் இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இருவருமே பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர். ஆனால், இந்தப் புகார் தொடர்பாக அஸ்தானா மீது மட்டும் மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதேபோல் அவருடன் சேர்ந்து லஞ்சம் வாங்கியதாக டி.எஸ்.பி தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இயக்குநர் அலோக் வர்மா, துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் தன்னை நேரில் வந்து சந்தித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இருவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.