img/728x90.jpg
தினகரன் ஒரு மண் குதிரை - ஜெயகுமார்

தினகரன் ஒரு மண் குதிரை - ஜெயகுமார்

 சென்னை:''தினகரன், ஒரு மண் குதிரை, அவரை நம்பி ஆற்றில் இறங்கிய, 18 எம்.எல்.ஏ.,க்கள், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

 
தினகரன் ஒரு 'மண் குதிரை: ஜெயகுமார் 
 
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை, நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள், நேற்று மரியாதை செலுத்தினர்.
அப்போது, அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:தினகரன், ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கிய, 18 எம்.எல்.ஏ.,க்கள் பாவம். அவர்கள், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினகரன், 'திருநெல்வேலி அல்வா' கொடுத்து விட்டார்.தமிழக அரசியலில் எடுபடாத நபராக, தினகரன் உள்ளார். அவரை குறித்து, நாங்கள் கவலைப்படுவதாக இல்லை. 'மறப்போம், மன்னிப்போம்' என்ற வகையில், பிரிந்து சென்றவர்களை அழைத்துள்ளோம். 
 
சசிகலா குடும்பத்தை தவிர, யார் வந்தாலும், அவர்களை சேர்த்துக் கொள்வதை, கட்சி முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.
 
மதுரை:'எப்போது தேர்தல் வந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் பழனிசாமிக்கு பாடம் புகட்டுவர். அப்போது யார் எட்டப்பர்கள் என்று தெரியும், என அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன் தெரிவித்தார்.மதுரையில் அவர் மேலும் கூறியதாவது:நீர் அடித்து நீர் விலகாது என கூறிவிட்டு பதவியிழந்த 18 பேரை பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒருபக்கம் அழைத்தாலும் மற்றொரு பக்கம் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கின்றனர்.இப்படி தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி விட்டு மற்றொரு பக்கம் தலைமை செயலாளரை வைத்து தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் வேண்டாம் என கடிதம்எழுகின்றனர். ஏன் இந்த இரட்டை வேடம். எத்தனை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் போல் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 18 எம்.எல்.ஏ.,க்களை
 
ஆசை வார்த்தை கூறி நான் அழைத்து வந்து விட்டதாக பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 234 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல்வரானவரா அவர். அவரது கேள்விக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 
எட்டப்பர்கள்: முதல்வர் கோபம்
 
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது: சில எட்டப்பர்கள் ஆசை வார்த்தைகளை கூறி, அ.தி.மு.க., விலிருந்து ஒருசில தொண்டர்களை அழைத்துச் சென்றனர். தினகரன் அ.தி.மு.க., உறுப்பினரே இல்லை.காவிரி பாயும் பகுதிகளில் ஒத்த கருத்து இருந்தால் புதிய அணை கட்ட முடியும். பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது, 
என்றார்.