img/728x90.jpg
விசைப்படகு இன்ஜின் பழுதானதால் ஆழ்கடலில் தத்தளிக்கும் 13 மீனவர்கள்

விசைப்படகு இன்ஜின் பழுதானதால் ஆழ்கடலில் தத்தளிக்கும் 13 மீனவர்கள்

லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு இன்ஜின் பழுதானதால் 13 மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் தத்தளித்துவருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த கிளிட்டசுக்குச் சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த மாதம் 15-ம் தேதி ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காகச் சென்றனர். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த விசைப்படகில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், கேரளா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்றிருந்தனர். கர்நாடகா மாநிலம் மங்களாபுரம் பகுதியில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடந்த 9-ம் தேதி திடீரென இன்ஜின் பழுதாகியுள்ளது. பழுதை நீக்க மீனவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடலில் தத்தளித்துள்ளனர். இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மும்பைக் கடலோர காவல் மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, நேற்று கடலோர காவல் படையின் விமானம் மூலம் கண்காணித்தபோது லட்சத்தீவு அருகே 140 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தத்தளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மீட்புக் கப்பல் மூலம் பழுதடைந்த விசைப்படகை கட்டி இழுத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த கிளிட்டசுக்குச் சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த மாதம் 15-ம் தேதி ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காகச் சென்றனர். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த விசைப்படகில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், கேரளா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்றிருந்தனர். கர்நாடகா மாநிலம் மங்களாபுரம் பகுதியில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடந்த 9-ம் தேதி திடீரென இன்ஜின் பழுதாகியுள்ளது. பழுதை நீக்க மீனவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடலில் தத்தளித்துள்ளனர். இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மும்பைக் கடலோர காவல் மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, நேற்று கடலோர காவல் படையின் விமானம் மூலம் கண்காணித்தபோது லட்சத்தீவு அருகே 140 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தத்தளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மீட்புக் கப்பல் மூலம் பழுதடைந்த விசைப்படகை கட்டி இழுத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.