• :
  • :
களத்தில்

ஒரு பெண் பலி பன்றிக் காய்ச்சலுக்கு

 ஒரு பெண் பலி பன்றிக் காய்ச்சலுக்கு

தொடர் காய்ச்சல்களால் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்துவருகிறார்கள் தேனி மக்கள். பல இடங்களில் மர்மக் காய்ச்சலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியான சம்பவம் தேனி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி ஜீவா (வயது 34) இவர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாகத் தேனி கானாவிலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.

தொடர் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று ஜீவா, சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். ஆண்டிபட்டி பகுதியில் பன்றிக்காய்ச்சலுக்குக் கடந்த வாரம் மல்லிகா என்ற பெண் பலியான நிலையில், இன்று ஜீவா பலியாகியிருப்பது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.