• :
  • :
களத்தில்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் எவ்வளவு?

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் எவ்வளவு?

 'கஜா' புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் இன்று மாலை வரை கணக்கிடப்பட்ட அரசு அறிக்கைகளின்படி இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம்  நவம்பர் 11 அன்று, வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'கஜா' எனப் பெயரிடப்பட்டது. தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக அரசு 'கஜா' புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டது. 
 
பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த மக்கள் பெரும்பாலும் குடிசைப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 16 அன்று, நள்ளிரவு 12.30 மணிக்கு நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினம் பகுதியில் கரையைக் கடந்தது. 
 
பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேரோடு விழுந்தன. பல இடங்களில் குடிசைகள் சேதமடைந்தன. மனித உயிரிழப்பு என  20-க்கும் மேற்பட்டவர்கள், இப்போதுவரை கணக்கிடப்பட்டுள்ளனர். 
 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்' எனக் கூறியுள்ளார். தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை, 'கஜா' புயல் நிவாரணப் பணிகளில் துரிதமாகச் செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது  ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். 
 
'கஜா' புயல் பற்றியும், புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்குறித்தும் கீழே தரப்பட்டுள்ளது. இன்று மாலை வரை கணக்கிடப்பட்ட அரசு அறிக்கைகளின்படி இவை குறிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்வது நின்ற பிறகும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அரசு அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்ட பிறகு, இந்த எண்ணிக்கைகளில் மாற்றம் ஏற்படும்.