• :
  • :
களத்தில்

புதுக்கோட்டையில் ஸ்டாலின் ஆய்வு - கஜா புயல் தாக்கம்

புதுக்கோட்டையில் ஸ்டாலின் ஆய்வு - கஜா புயல் தாக்கம்

 கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

 
தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க தலைவர் காரில் ஆய்வு மேற்கொண்டார். விமானம், மூலம் திருச்சி வந்த மு.க. ஸ்டாலின், கார் மூலம் கந்தர்வகோட்டை, மருதங்குறிச்சி, கறம்பக்குடி வழியாக பேராவூரணி சென்றடைந்தார். அங்குள்ள பகுதிகள் சிலவற்றைப் பார்வையிட்ட  மு.க.ஸ்டாலின், மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஆவணம் கைகாட்டி, அனவயல், மாங்காடு, வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தார். வேனில் இருந்தவாறே மக்களை சந்தித்து கையசைத்தார்.
 
பின்னர், ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை வந்தார். புதுக்கோட்டையில் தி.மு.க தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை சென்றார். இதில், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.