• :
  • :
களத்தில்

எங்கே முகிலன்???

எங்கே முகிலன்???

எங்கே முகிலன்???

தமிழ்நாட்டில் எங்கு மக்கள் போராட்டம் நடைபெற்றாலும் அங்கு நீங்கள் முகிலனைப் பார்க்கலாம்.
 
எப்போது பார்த்தாலும் தூத்துக்குடி போறேன் தோழர், ஈரோடு போறேன் தோழர், மதுரைக்கு போறேன் தோழர், சென்னைக்கு போறேன் தோழர்னு ஓடிக் கொண்டிருப்பார்.
 
தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்காமல், 24 மணிநேரமும் மக்களைப் பற்றியே யோசித்து, அதனாலேயே தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை சிறையிலும், நீதிமன்றத்திலும் கழிப்பவர் தோழர் முகிலன்.
 
தாக்குதல், அடக்குமுறைகள், சிறை என தான் சந்தித்த அடக்குமுறைகளைப் பற்றி எப்போது கேட்டாலும், மிகச் சாதாரணமாக சொல்வார்.
 
மக்களுக்காக இவ்வளவு தியாகங்களை செய்கிறோமே, இருந்தும் அதையெல்லாம் இந்த சமூகம் பெரிதாக மதிப்பதில்லையே என்றெல்லாம் அவர் கவலைப்பட்டதே கிடையாது.
 
ஏனென்றால் அவர் மக்கள் மீது பேரன்பு கொண்டவர். அதனால்தான் ஒற்றைக் கைப்பையை மாட்டிக் கொண்டு தமிழ்நாட்டின் எல்லா பகுதிக்கும் அவரால் தினந்தோறும் சலிப்பின்றி ஓட முடிகிறது.
 
தன்னிடம் தங்கள் பிரச்சினையை தெரிவித்த மக்களுக்காக எந்த வழக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்.
 
எல்லையில் ராணுவத்தினர் நிற்பதால் தான், நாம் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் முகிலனைப் போன்ற சமூகப் போராளிகள் நமக்காக செய்கிற தியாகத்தினாலேயே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.
 
அப்படிப்பட்ட தோழர் முகிலன் ஸ்டெர்லைட் படுகொலையைப் பற்றிய புதிய ஆதாரத்தை வெளியிட்ட பிறகு காணாமல் போயிருக்கிறார். நான்கு நாட்களாக அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை. கடத்தப்பட்டாரா? கைது செய்யப்பட்டாரா? பாதுகாப்பாகத்தான் இருக்கிறாரா என எதுவும் தெரியவில்லை.
 
நமக்காக உழைக்கிற தோழர் முகிலனுக்காக குரல் கொடுப்பது நம் கடமை. அனைவரும் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல் என்று கேள்வி எழுப்புங்கள்! முகிலனுக்காக எழுதுங்கள்! முகிலனுக்காக பேசுங்கள்!
 
#WhereIsMugilan