img/728x90.jpg
2019 தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் எங்களின் வாக்குறுதிகள்!

2019 தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் எங்களின் வாக்குறுதிகள்!

2019 தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் எங்களின் வாக்குறுதிகள்!

வ.கௌதமன்

தலைவர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
 
1. தூத்துக்குடி மண்ணை நஞ்சாக்கிய நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நம் மண்ணில் இருந்து அகற்றிட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். 
2. தூத்துக்குடி, தொழிற்சாலைகள் மிகுந்த நகரம் என்றாலும் நிலம், நீர், காற்று மாசுபாடு அடையும் தொழிற்சாலைகளை அப்புறபடுத்தி மேற்கண்ட சீர்கேடு அல்லாத, வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கான தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். 
3. இந்தியாவிலேயே அதிகமான பனை மரங்கள் தமிழகத்திலும், தமிழகத்திலேயே அதிகமான பனை மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும்தான் இருந்தது. ஆனால், தற்போது பனைத் தொழில் நலிவடைந்ததால் பனைத் தொழிலாளர்களும் பிற தொழில்களுக்கு மாறிவிட்டனர். பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் பனைத்தொழில் இல்லாத மாதங்களுக்கு பனைத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். அத்துடன், இத்தொழிலை உயிரூட்டும் வகையில் தூத்துக்குடி மண்ணில் தனி பனைவாரியம் அமைக்கப்படும். பனங்கள் இறக்க அரசின் அனுமதி பெற்றுத்தரப்படும்.
4. பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பனை மதிப்புக்கூட்டுதல், பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு அவற்றிற்கான விற்பனைச் சந்தை அமைக்கப்படும். 
5. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தீப்பெட்டித் தொழிலாளர்களின் 7 ஆண்டு கோரிக்கையான ஊதிய உயர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். அத்துடன் தீப்பெட்டி உற்பத்திக்கான ஜி.எஸ்.டி., வரி சதவீதம் பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடன்குடி கருப்பட்டி, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுத்தரப்படும். 
6. எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் அதிகமான பரப்பளவில் நடைபெறும் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்களைச் சாகுபடி மற்றும் அதன் மதிப்புக்கூடுதல்  செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதுடன் விற்பனைச் சந்தை ஏற்படுத்தப்படும்.  
7.விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் வத்தல் மூட்டைகளைச் சேமித்து வைக்கக் குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். விவசாயிகள் விளைவித்த விலைப்பொருட்களைத் தூத்துக்குடி,கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஒட்டபிடாரம் ஆகிய இடங்களில்  விலைப்பொருட்களான விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்படும்.
8. விவசாயக் குடும்பத்தில் பிறந்து படித்த, முதல்தர பட்டதாரிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித்தர ஆவண செய்யப்படும். மற்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள 
விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள கடன்கள், நகைக்கடன் உட்பட அனைத்தையும் ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9. ஒட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட புதியம்புத்தூரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.
10. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடலோர மீனவக் கிராமங்களில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைப்பின்னல் கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை நவீன முறையில் அமைக்கப்படும். 
11. தோணி, லாஞ்சி, வல்லம், கட்டுமரம் பயன்படுத்தும் மீனவர்களின் வாழ்வாதாரம் அனைத்து மட்டங்களிலும் உயர ஆவண செய்யப்படும். மாலுமிகள் ஓய்வூதியம் அய்யாயிரம் உயர்த்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
12. தூத்துக்குடியில் அரசு பல்மருத்துவக் கல்லூரி,  கோவில்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தார், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். 
13. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் ஆணையம், வங்கி, காப்பீடு, இரயில்வே, தபால்துறை ஆகிய போட்டித் தேர்வுகளில் படித்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று வேலையில் சேர்ந்திடும் வகையில் இலவசப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 
14. மூன்று  மாதத்திற்கு ஒருமுறை,  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். 
15. மூன்று மாதத்திற்கு ஒருமுறை முதியோர்கள் மற்றும் பெண்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவசக் கண் பரிசோதனை மற்றும் அறுவைச் சிகிச்சை செய்திட மருத்துவ முகாம் நடத்தப்படும். 
16. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் சேவை அமைய நடவடிக்கை எடுக்கப்படும். 
17. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தூத்துக்குடியில் வி.வி.டி.,சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும். அத்துடன் 2வது கேட் பகுதியில் மேம்பாலம், 1வது கேட் பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
18. மழைக் காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.12,000 உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். 
19. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் 20 டி.எம்.சி., தண்ணீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள பிற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும். 
20. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடிந்து விழுந்து ஓராண்டைத் தாண்டியும் கட்டப்படாத கிரிப்பிரகார மண்டபம் கட்டி முடிக்கப்படுவதுடன், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். 
21. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் விமரிசையாக நடைபெறும் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகள், ஆண், பெண், ஊனமுற்றோருக்கானக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக்கப்படும். 
22. மணப்பாடு கடற்கரைப் பகுதியில் நீர்ச்சறுக்கு விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படும். 
23.கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கப்படும். இத் தொகுதியில் உள்ள 10 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு  டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். 
24. சட்டமன்றத் தொகுதி வாரியாக மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
25. சிறுபான்மையினருக்கு பெரும் அரணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்து, கிருத்துவ, இஸ்லாமிய உறவுகளுக்கிடையில் உன்னதமான மத நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்.

PDF

PDF Link