மதத்தை முதன்மைப்படுத்தாத - ஆயுதப்போராட்டத்தை ஏற்காத யாசின் மாலிக் கட்சிக்குத் தடை ஏன்?

மதத்தை முதன்மைப்படுத்தாத - ஆயுதப்போராட்டத்தை ஏற்காத யாசின் மாலிக் கட்சிக்குத் தடை ஏன்?

மதத்தை முதன்மைப்படுத்தாத - ஆயுதப்போராட்டத்தை ஏற்காத யாசின் மாலிக் கட்சிக்குத் தடை ஏன்?

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் காசுமீரில் யாசின் மாலிக் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

“காசுமீர் விடுதலை முன்னணிக் கட்சியைத் (JKLF) தடை செய்து, அதன் தலைவர் யாசின் மாலிக்கை சிறையில் அடைத்துள்ளது இந்திய அரசு.

காசுமீர் விடுதலை ஆயுதக் குழுவினரால் அன்றாடம் ஆபத்துகள் சூழ்ந்துள்ள வாழ்க்கை யாசின் மாலிக் வாழ்க்கை. அதனால்தான் அவருக்கு இந்திய அரசின் ஒப்புதலுடன் சம்மு காசுமீர் அரசு சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வந்தது.

வாச்பாயி தலைமை அமைச்சராக இருந்தபோது, இந்திய அரசுடன் காசுமீர் தொடர்பான அமைதிப் பேச்சு நடத்தும் குழுவில் யாசின் மாலிக்கையும் சேர்த்திருந்தார்.

காசுமீர் விடுதலை அமைப்புகளில் மதத்தை முதன்மைப்படுத்தாமல் தேசிய இனத்தை முதன்மைப் படுத்துவது யாசின் மாலிக்கின் சம்மு காசுமீர் விடுதலை முன்னணி. ஆயுத அரசியலை மறுத்தவர் யாசின்!

பதவிப் பித்தம் தலைக்கேறி மோடியும், அவரது பரிவாரங்களும் இந்தியாவுக்கு எவ்வளவோ பேரிழப்புகளை உண்டாக்கி வருகின்றனர். உயிரிழப்புகளை உண்டாக்கி வருகின்றனர். உயிரிழப்புகள் - பொருளிழப்புகள் - அடிப்படை உரிமைப் பறிப்புகள் - சனநாயகக் கவிழ்ப்புகள் எனப் பலவற்றைச் செய்து வடநாட்டு மக்களிடையே இந்து மதவெறியைக் கிளப்பி வாக்கு வாங்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம்! அதற்கு எவ்வளவு பேரைப் பலி கொடுப்பது? எவ்வளவு உரிமைகளைப் பறிப்பது?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.