img/728x90.jpg
img/728x90.jpg
சுப்பிரமணிய சோமாறியின் பிராமண எசமானவாதம்!

சுப்பிரமணிய சோமாறியின் பிராமண எசமானவாதம்!

சுப்பிரமணிய சோமாறியின் பிராமண எசமானவாதம்!

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் பா.ச.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியின் அண்மைப் பேட்டி குறித்த கேள்விக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் விடை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :

“சுப்பிரமணிய சாமி, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் சௌக்கிதார் இல்லை. நான் ஒரு பிராமணன். பிராமணன் காவல்காரன் வேலை பார்க்கமாட்டான்” என்று கூறியுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தினாலும், சீன அரசுடன் இராசதந்திரம் பேசினாலும் பூணூல் கழற்றாத ஆச்சார பிராமணர்கள் ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் காணிக்கை கேட்ட கயவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு சுப்பிரமணிய சோமாறியின் கூற்று தக்க சான்றாகும்.

சுப்பிரமணிய சோமாறியின் கூற்று ஏமாளித் தமிழர்களின் கண்களைத் திறக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் வர்ணாசிரமமம் ஏது? பிராமணிய ஆதிக்கம் ஏது என்று பேசித் திரியும் பிராமணரல்லாத அதிகப் பிரசங்கிகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால் நல்லது.

பெரியார் ஊழிக்கூத்து நடத்தி பிராமண வர்ணாசிரமத்தைச் சுட்டெரித்து விட்டார் என்று தம்பட்டம் கொட்டித் தமிழ்த்தேசியத்தை மறுத்தும், தமிழ் மண்ணைப் பெரியார் மண் என்று பெயர் மாற்றியும் பரமானந்தப் பரவசத்தில் உள்ள திராவிடவாதிகளும் உள்ளதை உள்ளவாறு பார்த்திடப் பழக வேண்டும்.

சுப்பிரமணிய சோமாறி தனி மனிதர் இல்லை! பிராமணிய பேராதிக்கத்தின் பல வண்ணப் பிரதிநிதிகளில் இவர் ஒரு இரகம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தான் - இந்திய அரசுக் கட்டமைப்பு பற்றி வரையறுக்கும்போது, “இந்தியப் பெரு முதலாளிகள் தலைமையிலான பிராமணிய இந்தி ஆதிக்க அரசு” என்று கூறியுள்ளது. இப்படி ஒரு வரையறுப்பை அதிகாரப்பூர்வமாக தி.மு.க. வெளியிடுமா?

தமிழ்த்தேசியர்கள் பிராமண ஆதரவாளர்கள் - இந்துத்துவாவாதிகள் என்று முழுப் பொய்களை விற்பதில்தான் பெரியாரியர்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள்! பிராமணிய ஆதிக்கத்தை எதிர்க்கப் புதிய களங்கள் எதையும் அவர்கள் கட்டமைக்கவில்லை.

அதே செவ்வியில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை ஆக மாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார் சுப்பிரமணிய சோமாறி! அவ்வளவு உறுதியாக அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது? அரசு எந்திரத்தில் அவ்வளவு உறவுடன் இருக்கிறார் சுப்பிரமணிய சாமி!

சுப்பிரமணிய சாமியும் பூணூலைக் காட்டுகிறார்; இராகுல்காந்தியும் பூணூலைக் காட்டுகிறார். இந்திய அரசமைப்பில் ஏகபோகவாதிகள் முதலாளிகள் மட்டுமல்ல! வர்ணாசிரமவாதிகளும்தான்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.