img/728x90.jpg
மீண்டும் கூட்டாச்சியை நோக்கி நகரும் இந்தியத் தேர்தல் களம்

மீண்டும் கூட்டாச்சியை நோக்கி நகரும் இந்தியத் தேர்தல் களம்

மீண்டும் கூட்டாச்சியை நோக்கி நகரும் இந்தியத் தேர்தல் களம்

இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான தேர்தலில் 4ஆவது கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 29ஆம் நாள் முடிவடைந்துள்ளது. இதுவரை 373 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. சுருங்கக்கூறின் பெரும்பான்மையான தேர்தல் முடிவடைந்துவிட்டது என்றே சொல்லலாம். இறுதி மூன்று கட்ட வாக்களிப்பும் மே 6, 12, 19 ஆகிய நாட்களில் 169 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. வாக்குகள் மே 23ஆம் நாள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும்.
 
இ;;ந்நிலையில் கள நிலவரங்களையும் முடிவுகள் எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் நோக்குவோம். கடந்த 2014 தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 273 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், தனி ஒரு கட்சியாகவே 282 ஆசனங்களைப் வென்று மோடியின் பா.ஜ.க ஆட்சியமைத்தது. கூட்டணியாக 336 ஆசனங்களை வென்றது. இது 1984 இன் பின் அதாவது 30 ஆண்டுகளின் பின் இந்தியாவில் நடந்த அதிசயம். ஆனால் அது இம்முறை சாத்தியமில்லை என்ற நிலையில் கட்சிகளின் கூட்டாச்சியே அமையவிருக்கிறது. அதிலும் ஏதாவது ஒரு அணி பெரும்பான்மை இலக்கான 273 தொகுதிகளில் வெற்றியை எட்டுமா? என்பதிலேயே தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் மோடியின் பா.ஜ.க தலைமையிலான அணியே முதன்மை இடத்தில் வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
 
உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 73, மகாராஸ்ராவில 48இல் 42, குஜராத்தில் 26இல் 26உம், ராஜஸ்தானில் 25இல் 25உம், மத்திய பிரதேசத்தில் 29இல் 27, கர்நாடகாவில் 28இல் 17, சண்டிகாரில் 11இல் 10, ஜர்காண்டில் 14இல் 12, கரியானாவில் 10இல் 7, டெல்கியில் 7இல் 7உம், உத்திரகாண்டில் 5இல் 5உம், கிமாச்சல் பிரதேசத்தில் 4இல் 4உம், கோவாவில் 2இல் 2உம் என கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க அணியின் பெருவெற்றி அமைந்தது.
 
கடந்த தேர்தலிலான இவ்வெற்றிக்கு எதிர் அணிகளில் இருந்த ஒற்றுமையீனமும் ஒரு பெரும் காரணியாக அமைந்தது. இம்முறை அதைப்பாடமாகக் கொண்டு மாநில கட்சிகளின் அணிசேர்ப்பு நடைபெற்றுள்ளதால், பா.ஜ.க பெரும் சவாலை எதிர்கொள்கிறது. பெரும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் மாநிலத் தலைவர்களான மாயாவதி - கைலேஸ் யாதவ் கூட்டால், பா.ஜ.க 25 முதல் 35 தொகுதிகளை அங்கு மட்டும் இழக்கும் சூழல் எழுந்துள்ளது.
 
அதேபோன்று மகாராஸ்ரா, குஜராத், ராஜஸ்தான் மத்தியப்பிரதேசத்தில் உள்ள 128 தொகுதிகளில் (48, 26, 25, 29), 120 தொகுதிகளை (42, 26, 25, 27) பா.ஜ.க கடந்த தேர்தலில் வென்றது. இம்முறை இம் மாநிலங்களில் கூட்டாக 30இல் இருந்து 40 வரையிலான தொகுதிகளை இழக்கும் நிலையிலேயே பா.ஜ.க அணி உள்ளது. மகாராஸ்ராவில் 48இல் 24 தொகுதிகளை சிவசேனாவிற்கு வழங்கத்தள்ளப்பட்ட பா.ஜ.க, சிவசேனா தலைவர் ராஜ் தக்கரேக்கு எதிரான மக்கள் நிலையால் பெரும் சவாலை ;எதிர்கொள்கிறது. சிவசேனா 24 தொகுதிகளில் 6ஜ வென்றாலே பாக்கியம் என்றநிலை அங்கு.
 
சண்டிகாரில் கடந்தமுறை 11இல் 10 தொகுதிகளை வென்ற பா.ஜ.க, இம்முறை அங்கு துடைத்தழிக்கபடலாம் என்ற பயம் காரணமாக கடந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை என்றநிலை. ஜர்காண்டில் 14இல் 12தொகுதிகளை கடந்தமுறை வென்ற பா.ஜ.க இம்முறை மேற்கண்ட மாநிலங்களை காங்கிரசிடம் இழக்கும் நிலையே எழுந்துள்ளது.
 
இவ்வாறு வட இந்தியாவில் சவாலை எதிர்கொள்ளும் மோடிக்கு, தென்இந்தியா இம்முறையாவது கைகொடுக்குமா? என்றால், கர்நாடகா நீங்கலாக மோடி எதிர்ப்பு அலையே அங்கு நிலவுகிறது. தமிழகத்தில் இம்முறை அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ஜ.க இணைந்தாலும், கடந்த முறை தனித்து 39 தொகுதிகளில் 37 வென்ற ஜெயலலிதா இல்லாத அணியாதலால், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அணி இம்முறை 30 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் நிலையே தமிழகத்தில் தென்படுகிறது. கேரளா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசத்திலும் பா.ஜ.க கால்பதிப்பது தொடர்ந்தும் பெரும் சவாலாக உள்ள நிலையிலேயே, கர்நாடகாவே ஈற்றில் உள்ளது. அங்கும் கடந்தமுறை வென்ற 17 தொகுதிகளை கடக்கக்கூடிய நிலை இல்லை.
 
தேர்தலுக்கு முந்தியநிலை இப் பொதுத்தேர்தலிலும் பா.ஜ.கவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது வேறு நோக்கப்படுகிறது. குஜராத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் முதற்தடவையாக பா.ஜ.க 100 ஆசனக்களுக்கு கீழ் இறங்கியது. கர்நாடகாவில நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் ஆட்சியமைக்கத் தவறியமை. சண்டிகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில காங்கிரசிடம் தோற்றுப் பொனமை. ஆந்திரப் பிரதேசம் மற்றும் மிசரோம் சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் முழுமையான காணாமல் போனமை எனத் தொடர்ந்த சவால்நிலை பொதுத் தேர்தலிலும் அங்கு ஒலிக்குமா?.
 
இந்நிலையில் மோடி மீதான கருத்துக்கணிப்பாக மாறியுள்ள இத்தேர்தல், மோடி அவர்களுக்கு பலத்த தலைவலியே. பா.ஜ.க தனித்து 200 முதல் 220 ஆசனங்களைப் பெறலாம் என்ற நிலையில் இருந்து கீழிறங்கி அது 200க்கு கீழே வருமானால் மோடி அவர்களுக்கு அது தனிப்பட்ட சவாலை வேறு ஏற்படுத்திவிடும். இருக்க கூட்டணிகட்சிகளுடன் இணைந்து 273 பெறவோ, அல்லது நெருங்கி வரத்தவறினாலோ மேலும் பெரும் சவாலை அது ஏறப்படுத்தும். யாரை வெளியில் இருந்து ஆட்சியில் சேர்த்துக் கொள்வது. அதில் தெலுங்குக் கட்சிகளே முதலில் வரும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறானா நிலையில் எத்தகைய ஸ்திரமான ஆட்சியை மோடியால் தரமுடியும்? என்ற கேள்வி வேறு உண்டு. இல்லை பா.ஜ.க தவிர்த்து ஏனையவை ஒன்றிணைந்து ஒரு ஆட்சியமைக்க முயலுமா? என்பது கூட தேர்தல் முடிவுகளில் தங்கியுள்ளது. எனினும் காங்கிஸ் தனியாக கடந்த முறை பெற்ற 44 இரட்டிப்பாக்கினாலும், 125ஜக் கடப்பது கடினமே.
 
இதேவேளை தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 22 சட்டசபைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது 234 சட்டசபை ஆசனங்களில் 97 திமுக அணியிடமும், 108 அதிமுக அணியிடமும், 3 தினகரனிடமும், 3 சுயேற்சைகளும், சபாநாயகர் என உண்டு. 4 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சிக்கான அறுதிப்பொருன்பான்மைக்கு 118 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், இம்முடிவுகளும் மே 23ஆம் நாள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. அதிமுக 22இல் 10 தொகுதிகளை வென்றால், அது தனது ஆட்சியை தக்கவைக்கும். திமுக 22இல் 21ஜ வென்றால் அது ஆட்சியைக் கைப்பற்றும். இந்நிலையில் அவ்விலக்கை இரு அணிகளும் எட்டாதநிலை ஏற்ப்பட்டால் தினகரன் அணியும், அதிமுகவில் இருந்து சுயேற்சையாக உள்ள மூவரும் பெரும் தாக்கம் செலுத்தும் நபர்களாக மாறுவார்கள். இவையனைத்திற்கும் மே 23 வரை காத்திருப்போம்.
 
- நேரு குணரட்னம் -