img/728x90.jpg
img/728x90.jpg
கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்தால் என்ன விளைவு

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்தால் என்ன விளைவு

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்தால் என்ன விளைவு?

அணுஉலையில் எரிபொருள் U235 எனப்படும் யுரேனியம் அணு.

வெப்பமின்நிலையங்களில் நிலக்கரி எரிபொருள் .நிலக்கரி எரிந்தால் எஞ்சுவது கரித்தூளும் flyash எனப்படும் சாம்பலும்.இவற்றால் நெஞ்சக/நுரையீரல் நோய் வரும்.காற்று மாசுபடும்.

யுரேனியம் எரிபொருளாக அணு உலையில் பயன்படுகிறது.
அணுஉலையில் உள்ள யுரேனியம் எரிக்கப்படுவதில்லை .
யுரேனியம் அணு நியுட்ரான் துகளால் பிளக்கப்படுகிறது.

அவ்வாறு அணுக்கருப் பிளவைக்கு உட்படும் யுரேனியம் தண்டு 18 அல்லது 36 மாதங்களுக்குமேல் பிளவையைத் தொடர பயனற்றதாகிவிடும்.
ஆனால் எஞ்சி இருப்பது சாம்பல் அல்ல.

1சதவீதம் யுரேனியம்235, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் புளுடோனியம்
0.6 சதம், யுரேனியம் 238 என்ற அணு 95 சதம், 3 சதம் கதிரியக்க தன்மையுடைய பல்வேறு அணுக்கள்.

Tc99 எனப்படும் டெக்னீசியம் 2லட்சத்து 20ஆயிரம் ஆண்டுகள் அரை வாழ்வுக்காலம் உடையது புளூடோனியம் அரைவாழ்வுக்காலம் 24ஆயிரம் ஆண்டுகள், அயோடின்129ன் அரைவாழ்வுக்காலம் 15.7மில்லியன் ஆண்டுகள்.

( ஒரு கிராம் அயோடின்129 அணுக்கரு கழிவில் இருக்குமானால் அது காமாக்கதிரை உமிழ்ந்து பீட்டா கதிரை உமிழ்ந்து அரை கிராமாக குறைய 15.7 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் ஆண்டுகள்.) எடுத்துக்காட்டாக இந்த அயோடின் 129 நம் உடலுக்குள் நீர் வழியாக உள் செல்லுமானால் தைராய்டு சுரப்பி உறிஞ்சிக்கொள்ளும்.காமாக்கதிர் அயோடின்129 உமிழ்வதால் தைராய்டு சுரப்பிபுற்றுநோயால் பாதிக்கும் வாய்ப்புண்டு . புக்குஷிமா அணுஉலை விபத்தில் வெளிவந்தது கதிரியக்க அயோடின் ஆகும்.

இந்த அணுக்கருக் கழிவுகளை முதலில் நீர்தொட்டியில்வைத்தால் நீர் கதிரியக்க வீச்சை உட் கொண்டு விடும்.ஆனால் அங்கேயே வைக்க மாட்டார்கள்.எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் அருகில் உள்ள YUCCA யுகா மலையில் குழிதோண்டி அதனுள்ளே அணுக்கழிவை கொட்டுகிறார்கள்.

இந்தியாவில் 22 அணுக்கரு உலைகள் பல்வேறு இடங்களில் இயங்குகின்றன.இவற்றின் கழிவுகளை கதிரியக்க ஆபத்தில்லாமல் புதைக்க என்ன செய்யப் போகிறது இந்திய அணுசக்தி துறை?
கூடங்குளம் கழிவை பாதுகாப்பதே மிகப்பெரிய சவால்.
இந்தச் சூழலில் எல்லா அணுஉலைக்கழிவையும் கூடங்குளத்துக்கு கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்களோ?

மக்களைப்பற்றி ஆளுகின்றவர்களுக்கு என்றுமே அக்கறை இருக்காது.

அரசை நோக்கி ஒன்றுபட்டு உரத்த எதிர்ப்பை தெரிவிக்க ஒருங்கிணைவோம்.