img/728x90.jpg
எப்போது விலை உயரும்? - 8 ஆண்டுகளாகக் காத்திருக்கும் பால் உற்பத்தியாளர்கள்

எப்போது விலை உயரும்? - 8 ஆண்டுகளாகக் காத்திருக்கும் பால் உற்பத்தியாளர்கள்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாவட்டச் செயலர் பாலமுருகன் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் 134 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 18,000 லிட்டர் பால் வழங்கி வந்தோம். தற்போது வெயில் என்பதால் உற்பத்தி 16,000 லிட்டராகக் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது.

35 கிலோ எடை கொண்ட தீவன மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோம். தீவனம், பராமரிப்பு செலவு என ஒரு நாளைக்கு குறைந்தது 200 ரூபாய் வரை செலவு செய்கிறோம். ஒரு நாளைக்கு குறைந்தது 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. தற்போது தண்ணீர்த் தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. ஆனால் ஒரு லிட்டர் பால் 26 அல்லது 27 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். 8 ஆண்டுகளாக இதே விலைதான். கடைகளிலோ, வெளியிலோ ஊற்றினால் ஒரு லிட்டருக்கு 35 ரூபாய் கிடைக்கும். ஆனால் பொதுத்துறை நிறுவனமான ஆவினுக்கு பால் கொடுப்பதால் எங்களுக்கு விலையே இல்லை. எங்கள் உழைப்பை எல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் நட்டம்தான் வரும்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

எங்கள் பிரச்னைகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். ஏற்கெனவே 3 மாதங்களுக்கு முன் பாலை கொட்டி போராட்டம் நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனாலும் இன்னும் பாலுக்கான விலையை மட்டும் உயர்த்தவில்லை. இதே நிலை நீடித்தால் கால்நடை வளர்ப்புத் தொழிலை விட்டே செல்ல வேண்டிய நிலை உருவாகும். பொதுத்துறை நிறுவனமான ஆவின் பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே விரைவாக பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.