• :
  • :
களத்தில்

நன்னிலத்திலும் தொடர் போராட்டம் வெடிக்கும்..! பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

நன்னிலத்திலும் தொடர் போராட்டம் வெடிக்கும்..!  பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் புதிய பெட்ரோல்-கேஸ் கிணறுகள் அமைக்கும் முயற்சியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் இறங்கியுள்ளது. இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ‘கேஸ் எடுப்பதற்காக கிணறுகள் வெட்ட  அனுமதித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நன்னிலம் அழிந்துபோகும். இதனை தடுத்து நிறுத்த நன்னிலத்திலும் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்' என எச்சரிக்கிறார்.

மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் அடி ஆழத்தில் நூற்றுக்கணக்கான கிணறுகள் அமைத்து, பெட்ரோல்-கேஸ் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டதாகவும், நிலத்தடி நீரில் ரசாயனத்தன்மை கலந்திருப்பதாகவும் இப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

விளைநிலங்களின் வழியே கொண்டு செல்லப்படும் பெட்ரோ-கேஸ் கிணறுகளில் அவ்வபோது ஏற்படும் கசிவுகளினால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் தற்போது புதிதாக 10 பெட்ரோல்- கேஸ் கிணறுகள் அமைக்கும் முயற்சியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்ய ப்பட்டார்கள். ’ஏற்கெனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒ,என்.ஜி.சி கிணறுகளால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரே சமயத்தில் புதிதாக 10 பெட்ரோல்-கேஸ் கிணறுகளை அமைக்கும் முயற்சி அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. விரைவில் நன்னிலம் அழிந்துபோகும். இதனைத் தடுத்து நிறுத்த கதிராமங்கம், நெடுவாசல் போல் நன்னிலத்திலும் மக்கள் தொடர் போராட்டக்களில் இறங்குவார்கள். தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்றார்.