• :
  • :
களத்தில்

ஆளுநர் ஆய்வு குறித்து ஒரு வழியாக வாய் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்!

ஆளுநர் ஆய்வு குறித்து ஒரு வழியாக வாய் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்!

 மதுரை: ஆளுநர் ஆய்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பல இடங்களில் அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநில சுயாட்சி உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.