img/728x90.jpg
img/728x90.jpg
கடலோர காவல் படை, நிர்மலா சீதாராமன் மாறுபட்ட கருத்து.. அப்போ, தமிழக மீனவர்களை சுட்டது யார்?

கடலோர காவல் படை, நிர்மலா சீதாராமன் மாறுபட்ட கருத்து.. அப்போ, தமிழக மீனவர்களை சுட்டது யார்?

சென்னை: மீனவர்கள் பற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியால் புது சர்ச்சை வெடித்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சில தினங்கள் முன்பு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் அவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் காயமடைந்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீனவர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று மண்டபம் கடலோர போலீசார் கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பேச்சுவார்த்தை

அத்துடன், துப்பாக்கி சூட்டைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராமநாதபுரம் மண்டபம் முகாமில் கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள் சங்கங்கள் இடையே பேசுவார்த்தை நடைபெற்றது. இதில், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.