• :
  • :
களத்தில்

தமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும்.

தமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும்.

தமிழர் தத்துவ மரபு குறித்த அறிஞர். நெடுஞ்செழியன் அவர்களது புத்தகங்கள் அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. 
தமிழர்களின் தத்துவ மரபு பற்றியான அறிவு, நமது தமிழ்தேசிய உரையாடலை வலுப்படுத்தும்.

நிமிர் பதிப்பகம்
அரங்கு எண்: 342

ஐயா.நெடுஞ்செழியன் அவர்களது எழுத்திலிருந்து,

”........................வைதிகத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கிய காரணத்தினால், தம்முடைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த அறிவுத் துறைகளை எல்லாம் தடை செய்தார்கள். அறிவுக்கான தடை அங்குதான் வந்தது. புஷ்யமித்ர சுங்கன் என்ற சுங்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் (சுங்க வம்சம் என்பது பார்ப்பன வம்சத்தைச் சார்ந்தது), வைதிக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவர்களான பவுத்த, ஜைன, ஆசீவகத் துறவிகளை எல்லாம் கழுத்தை வெட்டிக் கொல்லச் செய்கிறான். அவர்களின் தலையைக் கொண்டு வந்து கொடுத்தால் இவ்வளவு பொன் என்று அவன் பரிசு அறிவிக்கிறான். அப்படிப்பட்ட தடைகளுக்கு உள்ளாகும்போதுதான் இந்தச் சமயங்களில் பிரிவுகளும் திரிபுகளும் ஏற்பட்டுப் போகின்றன. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இவர்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் இந்த அறிவுக்கான தடைதான் தீண்டாமையாக மாறுகிறது. இந்தத் தடையின் காரணமாகத்தான் இந்திய சிந்தனை மரபிலேயே ஒரு வீழ்ச்சி ஏற்படுகிறது. சித்தர்களின் இலக்கிய மரபுகள் எல்லாம் அறிவுக்கான தடையினை உடைப்பதில்தான் வருகின்றன. ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது இந்தப் போராட்டம். பெரியார் காலம் வரையிலும் இன்றைக்கும் சமூக நீதிக்கான போராட்டம் என்பதே அறிவுக்கான தடையை உடைப்பதில்தான் இருக்கிறது ...................

-பேராசிரியர் நெடுஞ்செழியன்

அய்யா நெடுஞ்செழியனின் புத்தகங்கள் நிமிர் அரங்கில் 
( அரங்கு எண்- 342) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.