img/728x90.jpg
கட்டண உயர்வுக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்கள் : தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்

கட்டண உயர்வுக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்கள் : தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தை புரட்சி ஏற்பட்டுள்ளது என கூறுமளவுக்கு பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 20/01/2018ம்தேதி முதல் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பல இடங்களில் பேருந்துகளில் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சிகள், போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து நடந்த போராட்டத்தை போன்று தன்னெழுச்சி போராட்டமாக பஸ் கட்டண எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.