• :
  • :
களத்தில்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள  அறிக்கை :

வரவு செலவு திட்டம் வழக்கமாக ஆங்கிலத்தில் படிக்கப்படுவற்கு மாறாக இந்தியில் மட்டும் படிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டமோ, விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான திட்டமோ இல்லை.

 

பெரும் தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி குறைக்கபட்டிருக்கிறது.ஆனால்,தனி நபர் வருமானத்தின் வரி விலக்கு அளவு உயர்த்தப்படவில்லை.

 

வழக்கம் போல தமிழ்நாட்டிற்கான புதிய இரயில் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.மதுரை - நாகர்கோவில் இரட்டை இரயில் பாதை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

 

அன்புள்ள

 

பழ.நெடுமாறன்