• :
  • :
களத்தில்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 32-வது மலர்க் கண்காட்சி

 புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 32-வது மலர்க் கண்காட்சி

 புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 32-வது மலர்க் கண்காட்சி நேற்று (3.2.2018) மாலை தொடங்கியது.

 
புதுச்சேரி
 
 
புதுச்சேரி அரசின் வேளாண் துறை, ஒவ்வோர் ஆண்டும் மலர்க் கண்காட்சியை நடத்திவருகிறது. அதன்படி தாவரவியல் பூங்காவில் தொடங்கிய இந்த மலர்க் கண்காட்சியைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கிவைத்தார். நாளை (04.02.2018) மாலை வரை நடக்கும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட, ஒரு நபருக்கு ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மட்டுமல்லாமல் நீலகிரி, புனே, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பல வகையான மலர்ச் செடிகள் மற்றும் பழங்கள், காய்கறி வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் இந்தியப் பயிர் பதனிடும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் பஜன்கோ உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
 
மலர் கண்காட்சி
 
காய்கறிகளால் செய்யப்பட்ட சிற்பங்கள், டிராக்டர், மலர்களால் செய்யப்பட்ட பெங்குவின், மலர் ரங்கோலி போன்றவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 'பொதுமக்களிடையே தற்போது விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைந்துவருகிறது. விவசாயம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிடும் நிலையைத் தவிர்க்க, வேளாண் துறையும் கல்வித் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மாதத்துக்கு ஒருமுறை தங்கள் மாணவர்களை விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்' என்றார்.