• :
  • :
களத்தில்

மொழிப்போர் ||ஆவணப்படம் || 1965 - 2015 தமிழர் குருதியில் எழுதப்பட்ட வரலாறான - இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றைப் பதிவு

மொழிப்போர் ||ஆவணப்படம் || 1965 - 2015 தமிழர் குருதியில் எழுதப்பட்ட வரலாறான - இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றைப் பதிவு

உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழர் குருதியில் எழுதப்பட்ட வரலாறான - இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர் - 1965” ஆவணப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் .

1960 இல் நடந்த பல அரசியல்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த போராட்டத்தின் விளைவாக தான் தமிழகம் நிமிர்ந்து நிற்கிறது. அந்த வரலாறு குறித்து நாம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதனை ஆவணமாக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்திற்கு நன்றிகள் பாராட்டுக்கள்.
 
1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்:
 
1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
 
2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
 
3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.
 
4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.
 
5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.
 
6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945, இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.
 
7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.
 
8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.
 
9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.
 
10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.
 
11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.
 
12. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.
 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்