img/728x90.jpg
கார்ப்பரேட் நலன்களுக்காக தமிழ்நாட்டையும் மக்களையும் பலியிடவும் வேண்டாம் தமிழ்நாடு இழந்தது போதும்.

கார்ப்பரேட் நலன்களுக்காக தமிழ்நாட்டையும் மக்களையும் பலியிடவும் வேண்டாம் தமிழ்நாடு இழந்தது போதும்.

 இந்திய ஒன்றிய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் ஓ.என்.ஜி.சி. மூலமும், 

இப்போது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் முறையில் நிலத்திலும், தமிழ்நாட்டின் கடற்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களால் காவிரிப் படுகையும், மீனவர்கள் வாழ்வாதாரமும் அழியும் அபாயத்தை நினைத்து நாமெல்லாம் கவலைப்படுகிறோம், அத்திட்டத்தை தடுத்து நிறுத்த போராடுகிறோம்.

ஆனால் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இல. கணேசன், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலம் தியாகம் செய்யப்பட்டால் தவறில்லை என்று பேசியுள்ளார்!
 
புதுச்சேரியில் தங்களது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 
இல. கணேசன், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலமும், 
ஒரு மாநிலத்தின் நலனுக்கு ஒரு மாவட்டமும், ஒரு மாவட்டத்தின் நலனுக்கு ஒரு கிராமமும், ஒரு கிராமத்திற்காக 
ஒரு மனிதனும் தியாகம் செய்தால் தவறல்ல என்று கூறியுள்ளார்.
 
நல்ல தத்துவம்!
 
நமது கேள்வி: தியாகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டை பார்த்து சொல்கிறீர்களே? அதன் அர்த்தம் என்ன?
 
ஹைட்ரோகார்பன் எனும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, 
மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியன 
காவிரிப் படுகையில் எடுக்கப்பட்டால் அங்கு விவசாயம் முற்றிலும் அழிந்து போகுமே, அதைத்தான் 
நீங்கள் #தியாகம் என்று சொல்கிறீர்களா?
 
விவசாயத்தை, அதனோடு கூடிய வாழ்வை இழந்த பிறகு காவிரி படுகையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வேறு ஏது வழி? 
குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காதே, வாழ வழி ஏது?
 
கதிராமங்கலம் என்கிற ஒரு கிராமத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க நீரின்றி தவிக்கும் மக்களைக் காக்க வகையற்ற உங்கள் அரசு, காவிரிப் படுகை வாழ் மக்கள் அனைவரையும் எப்படி காக்கும்?
 
சரி, இவ்வளவு பெரிய தியாகம் உண்மையில் யாருக்கு - இந்நாட்டிற்கா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?
 
இதுவரை காவிரிப் படுகையில் 
பல நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் அமைத்து கச்சா, 
எரிவாயு எடுத்ததே ஓ.என்.ஜி.சி. அதனால் அப்பகுதி மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? 
நிலங்கள்_பாழானதை_தவிர?
 
இப்போது Open Acreage Licensing Policy திட்டத்தின் கீழ் காவிரிப் படுகையில் ஏலம் விடப்படும் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு 167.22 கோடி டன்கள். 
இதன் மதிப்பு ரூபாய் 76,000 கோடி.‌ இந்திய, சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் 6 ஏலம் எடுக்கின்றனர்.
 
இவர்கள் எடுக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்திய அரசுத் துறைகள் வாங்கினால் என்ன விலை கொடுக்க வேண்டும் தெரியுமா? அன்றைக்கு நிலவும் சர்வதேச விலையை கொடுத்து வாங்க வேண்டும்! அதுவும் அமெரிக்கா டாலரில்!
 
இந்நாட்டில எடுக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுவை டாலர்கள் கொடுத்து இந்திய நிறுவனங்கள் ஏன் வாங்க வேண்டும்? உங்கள் அரசுதான், 
பதில்_கூறுங்கள்.
 
விலையை இந்திய அரசு நிர்ணயிக்கவும் முடியாது! அந்த உரிமை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கு தான் உண்டு.
 
தங்கள் உற்பத்தியை இந்த நாட்டில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது.
 
அவர்களுக்கு எங்கு நல்ல விலையும் உடனடியாக பணமும் கிடைக்கிறதோ அங்கு விற்றுக் கொள்ளவும் 
சுதந்திரம் உண்டு.
 
ஏலம் விடும் இந்திய அரசுக்கும், 
தமிழக அரசுக்கும் ஒரு சிறிய தொகை ராயல்டி கிடைக்கும்.
 
அதிகபட்சம் 20 ஆண்டுகள், 
இருப்பு தீர்ந்தவுடன் காலி செய்து கொண்டு போய்‌ விடுவார்கள். நிலங்களும் வாழ்வாதாரமும் 
அழிந்து போவதுதான் மிச்சம்.
 
திருவாரூர்..
நன்னிலம் வட்டாரத்தில் போய் பாருங்கள், உண்மை தெரியும்.
 
எனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களால் #தமிழ்நாடு_இழந்தது_போதும். 
கார்ப்பரேட் நலன்களுக்காக நாட்டையும் மக்களையும் பலியிடவும் வேண்டாம், அதனை தியாகம் என்று சொல்லவும் வேண்டாம்.
 
இத்திட்டங்கள் பற்றி ஆராய்ந்தவன், அப்படி எழுதியதுதான் #ஹைட்ரோகார்பன்_அபாயம் 
என்ற புத்தகம். 
இந்நாட்டு மக்களைக் காக்க எழுதப்பட்டது.
 
மேலும்
இலவச சமையல் எரிவாயு திட்டம் யாருக்காக? எழுதுகிறேன்.
 
கா. அய்யநாதன்.
துணை தலைவர
தமிழர் தேசிய முன்னணி தமிழர்நாடு