• :
  • :
களத்தில்

இங்கிலாந்தில் அனில் அகர்வாலின் வேதாந்தா குழும அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் !

இங்கிலாந்தில் அனில் அகர்வாலின் வேதாந்தா குழும அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் !

இங்கிலாந்தில் அனில் அகர்வாலின் வேதாந்தா குழும அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் !

அன்பார்ந்த தோழர்களே,

பல ஆண்டுகளாக தூதுத்துக்குடி சுற்றுவட்டாரப்  பகுதியில் மாபெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி,  அதன் மூலம்  மக்களின்  உடல்நலத்தை பாதித்து சீரழித்து வரும்  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் விரிவாக்கத்தைக் கைவிட வலியுறுத்தி , மீனவர்கள் , வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை  பொதுமக்களும் பங்குபெறும், மாபெரும் பேரணியொன்று,  தூத்துக்குடி மாநகரம் அதிர  மார்ச் 24 சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது .

இலண்டன் மாநகரத்தில் நம் சொந்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதே தினத்தில், பறை முழக்கம் மற்றும் பதாகைகளுடன் ஸ்டெர்லைட்டின் தாய் வீடான இங்கிலாந்தில் அமைந்திருக்கும்   20 மில்லியன் டாலர் சொத்துகளுக்கு அதிபதியான   அனில் அகர்வாலின் வேதாந்தா குழும அலுவலகம் அருகே நடைபெறுகிறது.

இடம்:

14.00 , Saturday 24 th  March, 42 -4}Hill Street, Mayfair, London. (Nearest tube Green Park.) 

வீர முழக்கம் , பதாகைகளுடன் வாரீர். 

சுற்றுப்புற சீர்கேட்டால் தூத்துக்குடி வட்டாரத்தில் நிகழும் பாதிப்புகளுக்கும் மரணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க

Rally with Thoothukudi to ban Sterlite copper!

https://www.facebook.com/events/1978124922501896

On Saturday 24 th March a major protest of fishermen, merchants and residents will take place in Thoothukudi, Tamil Nadu, to ban the expansion of Sterlite 

2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நச்சுவாயு விபத்து மொத்த தூத்துக்குடியையும் பாதித்தது.இதன் காரணமாக 5000 பேர் பங்கு கொண்ட ஒரு மாபெரும் போராட்டத்தின் விளைவாக ஓரிரு மாதங்கள் இந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இது விளைவித்த சூழ்த்தியல் சேதாரங்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது. 

மன்னார்வளைகுடாவிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம் தன்னுடைய நச்சுக் கழிவுகளின் வாயிலாக மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது.

நம்முடைய இலண்டன் போராட்டம் வேதாந்தா நிறுவன முதலாளி அனில் அகர்வாலின் Mayfair வீட்டை முற்றுகையிடுவதாகும்.