img/728x90.jpg
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி முழு அடைப்பு  மக்கள் போராட்டம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி முழு அடைப்பு மக்கள் போராட்டம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி முழு அடைப்பு  மக்கள் போராட்டம்.

 
ஸ்டெர்லைட் ஆலையின் 2வது ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தூத்துக்குடியில் கடைகள் முழுவதும் அடைத்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆலையின் அடுத்த விரிவாக்கத்துக்கு, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கியுள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
 
பல அரசியல் தலைவர்களும், அவ்வப்போது இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில காலம் அமைதியாக இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆலைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள், தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். பின், குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே,  போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
தூத்துக்குடியில் சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை இயங்கி வருகிறது. தற்போது ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதற்கு குமாரெட்டியாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இதனால் நகரில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், காய்கனி சந்தை உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று விவிடி சந்திப்பு திடல் முன்பு திரண்டு கண்டன‌ பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில்  இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட‌ ஆயிரக்கணக்கான பொது மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இப்போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மினிபஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவையும் ஓடவில்லை. இதேபோல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவளிக்கும் வகையில் வீடுவீடாக விழிப்பு உணர்வு நோட்டீஸும் வழங்கப்பட்டு வருகிறது.

Youtube

https://www.youtube.com/embed/p3AWZBQDJC8