• :
  • :
களத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான போராளிகள் எழுதுமட்டுவாள் தளத்தில் ஒன்றுகூட்டப்பட்டு, 1200 1200 போராளிகளைக் கொண்ட தாக்குதல் அணியும் 300 போராளிகளைக் கொண்ட கனரக ஆயுத அணியும் ஒண்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த படைப்பிரிவாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை தலைவர் உருவாக்கினார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ – நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார்.
 
மிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார்.
 
வவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது .மிகவும் தீவிரமாக களமாடிய படையணியில் சிறப்பாக செயற்பட்ட போராளி கஜன் முதலாவதாக வீரச்சாவைத் தழுவி படையணியின் பாய்ச்சலுக்கு உத்வேகமூட்டினார். இச் சமரில் படையணியின் கனரக அணி உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தி எதிரியின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ் வெற்றிச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றினர்.
 
1992 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக கிண்ணி அவர்கள் பொறுப்பேற்று வவுனியா, நெடுங்கேணி பகுதிகளில் பல சமர்களில் படையணியை வழிநடத்தினார். இதன் பின்னர் வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் பல்வேறு வலிந்த தாக்குதல்களை படையணிநடத்தி தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியிடமிருந்து மீட்டது. 1994 ம் ஆண்டில் இளம் தளபதி கில்மன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் படையணியை நடத்தினார். அங்கே பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய கில்மன் ,அங்கு வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத் தொடர்ந்து படையணி மீண்டும் வன்னிக்கு வந்தது. 1995 ம் ஆண்டு மீண்டும் படையணியின் சிறப்பு தளபதியாக பால்ராஜ் பொறுப்பெடுத்து சூரியக்கதிர் , சத்ஜெய முதலான முறியடிப்புச் சமர்களில் படையணியை வழிநடத்தினார். தொடர்ச்சியாக களமாடிய படையணியில் பெருமளவிலான போராளிகள் வீரச்சாவடைந்தும் விழுப்புண்ணடைந்தும் இருந்த நிலையில், தலைவர் வன்னி மாவட்ட படையணியை சாள்ஸ் அன்ரனியுடன் இணைத்து படையணிக்கு புத்துயிரூட்டினார்;...