img/728x90.jpg
போர் முகம் - பாகம் 04

போர் முகம் - பாகம் 04

போர் முகம் 

பாகம் 04


காப்பரணைவிட்டு நகர்வு அகழிக்குள் இறங்கி அடுத்த காப்பரண் நோக்கிப் புறப்பட்டோம். 
 
நண்பகல் வெயில் களமுனையைக் கொழுத்துவதுபோல எறித்துக்கொண்டிருந்தது. அந்த வெயில் பொழுது ஒரு பாலைவனத் தேசத்தில் பெறுகின்றதைப் போன்ற ஒரு அனுபவத்தை எங்களிற்கு ஊட்டிக்கொண்டிருந்தது.
 
காப்பரணில் இருந்து நகர்வு அகழிக்குள்ளால் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் தேக்கங் குற்றிகளால் மூடி அடைக்கப்பட்ட பகுதி ஒன்று தெரிந்தது. தமிழ்மக்களின் வாழ்வைச் சிதைத்துவிட எத்தனிக்கும் எதிரியின் வரவைப்பார்த்துக் காத்திருக்கும் தமிழர்படையின் முன்னரங்கக் காப்பு நிலைகளில் இருந்து சில மீற்றர்கள் தொலைவில்தான் இந்த மூடி அடைக்கப்பட்ட பகுதி இருந்தது.
 
அந்தக்களத்தில் எதிரியின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளும் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டிருந்தன. எதிரியின் கழுகுக் கண்ணிற்குப் பிடிகொடுக்காமல் தப்பிவிட்டாலும் நடு மதியப்பொழுதின் வெயிலின் இராட்சதத்திற்கு தப்பிவிட முடியவில்லை. பாம்பைப்போல வளைந்து நெழிந்துசெல்லும் நகர்வு அகழிக்குள்ளால் வெயிலைப் பொருட்படுத்தாமல் நாங்களும் பாம்பைப்போலவே நகர்ந்தோம்.
 
இப்படியிருக்க தேக்கங்குற்றிகளால் மூடி அடைக்கப்பட்ட பகுதி என்னவாக இருக்கும் என்ற சிந்தனை மனதில் முட்டி மோதிக்கொண்டே இருந்தது. அதற்கு முடிவைக்கண்டுவிட முடியவில்லை.
 
 
அதனால் குணமதனிடம் ஏன் இப்படி மூடி அடைத்திருக்கிறீர்கள் என்று கதைகொடுத்தோம். குணமதன் தனது பயணத்தை நிறுத்தி மூடி அடைக்கப்பட்ட பகுதியையும் எங்களையும் பார்த்தன். குணமதனின் பார்வை ஏன் உங்களிற்கு இது தெரியாதா? என்பதுபோல் இருந்தது ஆனால் உண்மையில் அந்தக் களத்தின் எந்தத் தோற்றத்தையும் எங்களால் முழுமையாக உணர்ந்துகொள்ள இயலவில்லை.  உண்மைய சொல்லனால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. 
 
குணமதனின் பதில் வருவதற்கிடையில் எதிரியின் தளத்தில் ஒரு சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டது. உடனே  குணமதன் அண்ணா சத்தம் வித்தியாசமாக கிடக்குது இப்படி இருங்கோ..|| என்று கூற நாங்களும் அந்த நகர்வு அகழிக்குள் எங்களை மறைத்துக்கொண்டோம். இது எண்பத்தி ஒரு [ 81மிமீ ] மோட்டர் செல். எங்கட பக்கம்தான் குத்தியிருக்கிறான் - என்றான் துள்ளியமாக. அவன் கூறிமுடித்த சில மணித்துளிகளில் எதிரியின் எறிகணை ஒன்று எங்களுக்கு அப்பால் கடந்து சென்று பறட்டைப் பற்றைக்குள் வெடி ஓசையுடன் மின்னி கரைந்து சென்றது. 
 
குணமதனிடம் இது எவ்வளவு தூரத்தில் சென்று வெடித்தது என்று கேட்க இது இருநூற்று ஐம்பது மீற்றரிலதான் - என்று நாடா பிடித்து அளந்தால்போல் கூறினான். எதிரியின் தளத்தில் எங்கோ கேட்ட  சிறிய வெடி ஓசையை முதலில் நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 
 
 
ஆனால் அதை குணமதன் உன்னிப்பாக அவதானித்து இது எதிரியால்; நாங்கள் நடமாடும் பகுதியை நோக்கி ஏவப்பட்ட எறிகணைகள் என்பதை சிறிதுகூடப் பிசகாமல் கண்டறிந்து உசார்படுத்தினான். உன்மையில் அவனது செயல் எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்ப்படுத்தியது. வியப்பிற்கும் அப்பால் இந்த செல்லின் இனம் என்ன என்பதை எப்படிக்கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு வகையான சத்தம் வரும். என்று கூறி அவற்றின் சத்தங்கள் எப்படியானவை என்பதனையும் அவன் எங்களுக்கு பகுத்தாய்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். 
 
களத்தில் நிற்கின்ற ஒவ்வொரு போராளிகளும் அவன் செல்  குத்துகின்ற சத்தத்தையும் திசையையும் வைத்து இது என்ன செல்| எந்தப் பக்கம் வரப்போகிறது என்றெல்லாம் அறிந்து விடுவார்கள் என்று மிக சாதாரணமாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தான். 
இவற்றை இனங்கண்டு கொள்வதற்கு எங்களுக்கு யாரும் சொல்லித்தரவில்லை. களத்தில் தினமும் எதிரி வீசிக்கொண்டிருக்கின்ற எறிகணைகள்தான் எங்களுக்கு இந்த நுட்பத்தையும் இவற்றில் இருந்து தப்புகின்ற அனுபவப் பாடத்தையும் சொல்லித் தந்திருந்தன என்று முற்றிலும் மாற்றமான பதிலையும் சொல்லி முடித்திருந்தான். இரவில் அவன் செல் குத்தினால் பிளாஸ்சை வைத்து இது எங்கே வரும் என்று சொல்லுவார்கள் என்றும், அவன் போராளிகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். 
 
 
அந்தப் போராளியுடன் பேசிக்கொண்டே அந்த மூடி அடைத்திருந்த பகுதியைப் பற்றிய அலசலை மீண்டும் மெதுவாக ஆரம்பிக்க, குணமதன் எங்களைப் பார்த்து நீங்கள் அது என்ன என்று அறிவதில் வலு அக்கறையாகத்தான் இருக்கின்றீர்கள் என்று கூறிக் கொண்டு ஓரிரு அடிகள் நகர்வதற்கிடையில் மீண்டும் எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து உயிர் குடிக்கும் எறிகணை ஒன்று ஏவப் பட்டிருப்பதற்க்கான  சமிக்கை காற்றலையைக் கிழித்துக்கொண்டு எங்களிடம் ஓடி வர, குணமதன் அது எங்களிற்கில்லை! என்று தேவையற்றதைத்  தட்டிக்கழிப்பதைப்போல தட்டிக்கழித்தான்.
 
அந்தப் போராளியின் மதிப்பீட்டை நாங்கள் உணர்வதற்கிடையில் அது சரி என்றால்போல் அந்தச்  செல்| எங்களிற்குப் பக்கவாட்டில் நீண்ட தூரத்திற்கும் அப்பால் வீழ்ந்து வெடித்தது. செல் வெடித்த சத்தத்தைக் கேட்டவாறு நாங்கள் மூடி அடைக்கப்பட்ட பக்கம் திரும்பிப் பார்க்க அதன் ஒரு பகுதியால் தேங்கி நிற்கின்ற கழிவு நீர் வருவதுபோலத் தெரிந்தது. எங்களிற்கு சந்தேகம் சற்று அதிகமாகிவிட கழிவு தண்ணி எல்லாம் வந்திருக்குது சின்னச் சமையல் ஏதும் செய்யிறியளோ||? என்று இழுக்க குணமதன் மெல்லச் சிரித்துவிட்டு இதுதான் எங்கண்ட பெடியளின்ர கிணறு|| என்றான்.
 
இது கிணறாக இருக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத நாங்கள் என்ன கிணறா?|| என்று மறுதடவையும் கேட்டோம். உண்மையில் இவ்வாறு மூடி அடைக்கப்பட்டிருந்தது கிணறுதான் என்பதை எங்களிற்கு உணர்த்துவதுபோல அந்தக் கூட்டிற்குள் இருந்து யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. கிணற்றிற்குள் செல்வதற்கான பாதைகூட பதுங்கு அகழியாகவே இருந்தது. உண்மையில் களமுனையின் அமைப்பும் அதன் சூழல்களும் ஆச்சரியமானதாகவே இருந்தன. களமுனையில் இருக்கின்ற கிணற்றிற்குக்கூட குற்றிகள் போடப்பட்டு பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்ததை நேரில் பார்த்தும் எங்களால் நம்பிவிட முடியவில்லை.
 
 
சுற்றிச் சுழன்று கிணற்றடியைச் சென்றடைந்தோம். அங்கு குளித்துக்கொண்டிருந்த போராளி எங்களைப் பார்த்துச் சிரித்தவாறு வாங்கோ|| என்றான். நாங்களும் சிரித்தவாறு ஷஷபறவாயில்லை களமுனைக் கிணறும் பங்கறுக் குள்ளதான் இருக்குது|| என்றோம். இதற்கு இவ்வாறான ஏற்பாடு செய்திருப்பதற்குப் பின்னால் ஏதாவது காரணங்கள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மனதிற்குள் எழவே நீங்கள் எப்படி இந்த ஏற்பாட்டைத் தெரிவுசெய்தீர்கள்|| என்று கதையைத் தொடக்கினோம். அதற்கு அங்கு குளித்துக்கொண்டிருந்த நீதிவளவன் என்ற போராளி இதுக்குப் பின்னால பெரிய கதையே இருக்குது|| என்று கூறிவிட்டு குணமதனின் பக்கம் திரும்பிச் சொல்லுங்கோ என்பதுபோல பார்த்தான். அதற்குக் குணமதன்  ஏன் நீங்கள்தானே அடிவேண்டின ஆக்கள் சொல்லுங்கோவன்|| என்றான்.
 
அந்த வார்த்தை இதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு கதை இருக்கிறது என்பதை எங்களிற்கு அடித்துச் சொல்லியதுபோல நிரூபித்து விட்டது.  சொல்லுங்கோ| என்பதற்கிடையில் நீதிவளவன் குளித்தவாறே எங்களிற்குக் கிணற்றுக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். ஷஷநாங்கள் ஷலையினுக்கு| வந்த புதுசு. அப்ப நீங்கள் இப்ப பாக்கிறதைப்போல காப்பரணுகள் எதுவும் களத்தில் இருக்கவில்லை.
 
ஏன் நீங்கள் நடந்துவந்த நகர்வு அகழிகள் கூட எதுவும் இப்படி இருக்கவில்லை. இது இருதரப்பிற்கிடையில் போர் நடக்கும் ஒரு எல்லைவேலி என்று பேருக்குத்தான் இருந்தது.|| என்று செல்லியபடி அடுத்தவாளி தண்ணீரை தனது மேலில் ஊற்றிக்கொண்டு கதையைத் தொடர்ந்தான் வழமைபோல அன்றும் எல்லை வேலிகளை இறுக்கமாக அமைத்து காப்பரண்களையும் அமைத்துக் கொண்டிருந்தோம். சூரியன் மறைய நாங்களும் எங்களின் கடமையை முடித்துவிட்டோம்|| என்று கூறிக்கொண்டிருக்க அங்கு செங்கோடனும் வந்து எம்முடன் சேர்ந்துவிட்டான்.
 
நீதிவளவன் தொடர்ந்தான் நேரம் 6.40 ஆகியிருக்கும் எல்லாருக்கும் வேலை செய்த களைப்பு. அந்தக் களைப்புக்கு உடம்பெல்லாம் மண்ணும் வியர்வையும் சேர்ந்து எங்கள் உடம்பிலேயே மண் குழைத்து வைத்ததுபோல இருந்தது. அவ்வளவு தூரம் எங்கள் உடம்பில் வியர்வையும் மண்ணும் ஒன்றாகிவிட்டது. இப்பிடியிருக்க பெடியள் எல்லாரும் குளிப்பம் எண்டு திட்டம் போட்டுக்கொண்டிருந்தம்||. என்று சொல்லிக்கொண்டிருந்த இடையில் வந்து புகுந்த செங்கோடன்  என்ன மச்சான் எங்கண்ட அடிவாங்கின கதைபோல கிடக்குது|| என்று தனது வழமையான அறுவைப் பாணியில் கதையைத் தொடங்க அடிக் குன்றுக்குள் நீரைத்தாங்கி வைத்திருக்கும் கிணற்றடி களைகட்டத் தொடங்கியது. ஷஷஅப்ப நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து கிணத்தில அள்ளிக் குளிச்சுக் கொண்டிருக்க கொஞ்சப்பேர் சென்றி பாத்துக் கொண்டிருந்தாங்கள்.
 
 
செங்கோடனும் எங்களோடு நின்று குளிச்ச கோசில ஒருத்தர்! என்று இந்தக் கதைக்குள் செங்கோடனையும் இழுக்க அவன் குணமதனைப் பார்த்துச் சிரிக்க முகமாலை முன்னரண் போராளிகளின் எல்லை வேலிக்கு அருகில் இருக்கும் கிணற்றடி சிரிப்பொலியால் திளைத்துக்கொண்டிருந்தது. கிணற்றடியில் நின்று குளித்த  அவ்வளவு போராளிகளும் கலகலப்பாக அடிபட்டுக் குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது யாரும் எதிர் பார்க்காத மாற்றம் ஒன்று திடீரென நிகழ்ந்தது.
 
எதிரியின் தளங்களிற்குள் இருந்து, நாங்கள் குளித்துக் கொண்டிருந்த கிணற்றடியை நோக்கி செல்கள் வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கின. குளித்தவர்கள் குளித்தது  பாதி குளிக்காதது பாதி என்று அனைவரும் அருகில் இருந்த பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிக்கொண்டோம். என்று நீதிவளவன் சொல்லிக் கொண்டிருக்க செங்கோடன் இடையில் குழப்புவதுபோல கதையைத் தொடங்கினான்.
 
செல் அடிக்க என்ன நடந்திருக்கும் என்ற ஆவலில் இருந்த எங்களுக்கு செங்கோலனின் குறுக்கீடு சற்று எரிச்சலைத் தர மிகுதியை அவனே தொடர்ந்தான். நாங்கள் இப்படி அவன் அடிப்பான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் பதுங்கு குழியைக்கூட பெரிதாக அமைக்கவில்லை. ஒரு சிறிய பதுங்கு குழிதான் அதில் இருந்தது. நாங்கள் அனைவரும் அதற்குள் முண்டியடித்துக் கொண்டு பதுங்கிக் கொண்டோம் என்றான். இதில் ஏதும் விபரீதம் நடந்திருக்குமோ என்ற பயம் மனதில் சட் டென்று அடித்துக் கொண்டிருந்தது. 
 
எதுவும் பேசாமல் நின்ற குணமதன் அப்ப நல்லா இருந்திருக்குமே! என்று இழுக்க, செங்கோடன் தனது கண்களை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு மச்சான் அன்றைக்கு எங்களுக்கு அப்படி நடந்ததனால்தான் இப்ப எல்லோருக்கும் இப்படியான ஏற்ப்பாடு வந்தது. என்று செங்கோடன் இறுக்கமான தொணியில் சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்துக்கொண்டான். அவர்களது பகிடிச்சண்டை தொடர,  நாங்கள் அப்ப நீங்கள் பதுங்கு குழியில் கிடக்கப் பிறகு என்ன நடந்தது என்று கதையைக் கொடுத்து அவர்களை எங்களுடைய பேச்சுக்குள் வில்லங்கமாக இறக்கினோம். நீதி தான் கிணற்றடியில் குளிப்பதை மறந்து எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அவனின் உடல் காய்ந்துபோய் குளித்ததற்க்கான எந்தத் தடயமும் இல்லாதிருந்தது. அவன் தொடர்ந்தான். பிறகு நாங்கள் எல்லோரும் ஒருமாதிரி அங்கே இருந்து அவனின் செல் அடிக்கின்ற நேரத்திற்குள் காப்பரணுக்குள் ஓடி வந்துகொண்டோம். நல்லகாலம் ஒருவருக்கும் ஒன்றும் நடக்கவில்லை.
 
என்று சொல்ல எங்களிற்கு மனதில் இருந்த ஐயம் சட்டென்று ஓடி மறைந்துகொண்டது. நாங்கள்  குளிப்பு என்ன மாதிரிப் போச்சுது|| என்று கேட்க, செங்கோடன் ஷஷபிறகென்ன அப்பிடியே கொஞ்சநேரம் எல்லாரும் உடம்பு வழுக்க வழுக்க எங்கட
வலையளப் பாத்துக்கொண்டிருந்திட்டு கொஞ்ச நேரம் செல்ல அவனுக்குப் பூச்சுத்திப் போட்டுக் குளிச்சிட்டம்.|| என்றான்.
 
கிணத்தடி முழுக்க புக்கையாக்கிப் போட்டான்|| என்;று கூறிக்கொண்டு ஒரு மூலையில் இருந்த சல்லடையான தகரத்தைக் காட்டினான். கிணற்றைக் காட்டியவுடன் தான் எங்களிற்கு அந்த நேரத்தில் நிகழ்ந்த அடியின் உக்கிரம் தெரிந்தது. கிணறு சல்லடையாகிப்போய் இருந்தது. இந்த அடிக்குள் இருந்து எப்படித்தான் இவர்கள் தப்பினார்கள் என்ற கேள்வி பலமாக எழுந்துகெண்டிருந்தது. அதுக்குப்பிறகு எங்கண்ட பிளாட்டுன்| லீடர் பகுதித் தளபதிக்குச் சம்பவத்தைத் தெரியப்படுத்தியிருந்தார்||. சம்பவத்தை அறிந்த தளபதி எங்கண்ட இடத்துக்கு வந்து எல்லாத்தையும் பார்த்திட்டுப் போயிருந்தார். அவர் போய் எங்கண்ட கிணத்துக்கு கொஞ்ச தேக்கங் குத்தியள் அனுப்பி உடன கிணத்த மூடி அடைக்கச் சொல்லி கட்டளையையும் அனுப்பியிருந்தார்|| என்றான்.
 
 
அதுக்குப்பிறகு எங்களைப்போல எங்கண்ட கிணத்துக்கும் இப்ப பங்கர் அடிச்சிருக்கிறம் என்று கூறிமுடித்தான். அதற்கிடையில்; அண்ணா இதப்போய் வெளியால சொன்னால் சனங்கள் எல்லாம் சேர்ந்து முகமாலையிலதான் இப்ப பாதுகாப்புக்கூட எண்டு வந்துசேந்திடுங்கள் தெரியும்தானே|| என்று செங்கோடன் நகைச்சுவையாகக் கூற எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டார்கள்.
 
அண்ணா இப்ப பேப்பர் வாசிச்சால் ஊரிலதான் பாதுகாப்பு இல்லைப்போல இருக்குது. கிபிர் அடிச்சும் செல் அடிச்சும் கிளைமோர் அடிச்சும் சனங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டுதானே இருக்குதுகள். வீட்டுக்காரர் எங்களை நினைச்சுப் பயப்பிடுங்கள் ஆனால் நாங்கள் இஞ்ச அதுகள நினைச்சு ஏங்கிக் கொண்டிருக்கிறம். ஏதோ இப்ப போற போக்கப் பாத்தால் முன்னரங்கத்தில எதிரிக்கு முன்னால நிக்கிற நாங்கள்தான் தப்பப்போறம் போல கிடக்குது|| என்று சொல்லிக்கொண்டு நகர்வு அகழிக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான் குணமதன்.
 
களத்தில் போர் முகம் தொடரும்……