img/728x90.jpg
போர் முகம் : முகம் 05

போர் முகம் : முகம் 05

போர் முகம்

முகம் 05

போராளிகளின் வீரத்தில் திளைக்கும் களமுனையில் இருந்து....

 
மோட்டார் போராளியின் கடிதத்தை பத்திரமாக எங்கள் பொக்கற்றுக்குள் வைத்தபடி சென்றுகொண்டிருக்க பச்சை வர்ணச் சீருடையில் போராளி ஒருவன் வந்துகொண்டிந்தான்.
 
வந்துகொண்டிருந்த போராளி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி நிற்க என்ன ஐயன் பார்வை ஒருமாதிரி இருக்கு என்று குணமதன் கேட்க இல்லை இந்த இடத்திற்குப் புதுசாய் இருக்கு அதுதான் யாராய் இருக்கும் எண்டு யோசிக்கிறன்|| என்றான் ஐயன் பதிலுக்கு. ஏன் என்ன மச்சான் பூநகரிக்கு ஏதும் அவசரமாய் சொல்லவோணும் போல இருக்குதோ…? என்று குணமதன் இழுக்க ஐயனின் கறுத்த உருவத்தில் திடீரென வெள்ளை நிறப் பற்கள் மினிங்கின.
 
ஐயன் நீ சிரிச்சால்தான் மச்சான் அந்த மாதிரி இருக்கு|| என்று அடுத்த கதையையும் பட்டெனச் சொல்லி முடித்தான் குணமதன். குணமதனின் அனைத்துக் கதைகளிற்கும் பதில் சொன்னால் போல் ஐயன் பேசத் தொடங்கினான். சீ… பூநகரிக்கு என்னத்தச் சொல்லுறது வீட்டுக்காறர் பிரச்சனையில்லாமல் தானே இருக்கினம். அவைக்கு என்னத்தைச் சொல்லிவிடுறது. எல்லாம் யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள போய் நிண்டுகொண்டு ஆறுதலாய்ச் சொல்லிவிடுவம்.
 
என்று கூறித் தனது மனத் தவிப்பை வெளிப்படுத்தினான். ஐயனிடம் இருந்து நாங்கள் இப்பிடிப் பதிலை எதிர்பார்த்திருக்காததால் எங்களிற்கு அவனின் பேச்சுச் சிந்தனையைத் தூண்டியது. என்னமாதிரிப் போகுது களமுனை வாழ்க்கை அந்தப் போராளியுடன் உரையாடலை மெல்ல ஆரம்பித்தோம். இஞ்ச எங்களுக்குப் பெரிசாய் எந்தக் குறையும் இல்லை நல்லாய் இருக்கிறம் என்றான். வீட்டில இருக்கேக்க ஏதோ போர்க்களம் எண்டால் பெரிசாய் நினைச்சம். ஆனால் இஞ்ச வந்தாப் பிறகுதான் இது ஒரு வினோதமான விளையாட்டு எண்டு தெரியுது என்றான் சிரித்தவாறு.
 
திடீரென அண்ணாக்கள் மன்னிக்கவேணும் என்ற பேச்சுடன் அங்குவந்த போராளி ஒருவன் ஐயண்ணா உங்கள உடன வரட்டாம்|| என்று சம்பந்தமற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத புதிரான மொழி ஒன்றைப் பயன்படுத்திச் சொல்லிவிட ஐயனும் புரிந்துகொண்டவன் போல தலையை ஆட்டினான். எங்களிற்கு இது களமுனையின் மொழி என்பதைத் தவிர எதுவும் புரியவில்லை. தகவலைச் சொல்லிய போராளி எங்களையும் பார்த்துச் சிரித்துவிட்டுப் புறப்பட்டான்.
 
 
அந்தப் போராளியிடம் என்ன உடனயே திரும்பிறியள|| என்று கேட்க அவன் சிரித்தபடி ஷஷவேற வேலையள் கனக்க இருக்குது அதுதான்… என்று இழுத்தான். உடனடியாகவே ஐயனும் தனக்குக் கட்டளை அனுப்பிய குறித்த இடத்திற்குப் புறப்பட இருவருமாகக் காப்பரணில் இருந்து புறப்பட்டார்கள். நாங்களும் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் நகர்வகழிக்குள் எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
 
ஓரிடத்தில் போராளிகள் சிலர் எதனையோ செய்துகொண்டிருப்பது போலத் தெரிந்தது. அதற்குச் சாட்சியாய் நகர்வு அகழிகளிற்குள்ளால் அவர்களின் தலைக்கறுப்பு மாத்திரம் வெளியே தெரிந்துகொண்டிருந்தது. வழைந்து செல்லும் அகழியின் வளைவு நெழிவுகளிற்குள்ளால் சற்றுச் சிரமப்பட்டு அவர்களை அவதானித்தோம். தலைக் கறுப்புக்களுடன் இடையிடையே அவர்களின் கைகள் அகழியின் மேற்புருவம் வரை வந்து வந்து சென்றுகொண்டிருந்தன.
 
அவர்களின் கைகள் அகழியின் மேற்புருவங்கள் வரை உயர்ந்து செல்கின்றபோது வெயிலின் வெப்பத்தால் வெந்த மண் புழுதிகள் ஆனையிறவைப் பிடித்துவிட வேண்டும் என்ற எதிரியின் அர்த்தமற்ற ஆசைபோல தாங்கள் வானத்தைத்தொட்டு விடுவோம் என்ற விறுமாப்பில் மேல் எழுந்துகொண்டிருந்தன.
 
இப்போது அந்த நகர்வகழிக்குள் என்ன நடக்கிறதோ? என்பதனை அறிந்துவிட வேண்டும் என்ற வேகத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் சிந்தனைகள் அனைத்தும் அந்தப் போராளிகளின் செயற்பாடுகள் பற்றியதாகவே இருந்தன. அதனால் நகர்வகழியின் தரையை அவதானிக்காமல் நாங்கள் அந்தப் போராளிகளைக் கூர்ந்து அவதானித்தபடி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தோம். திடீரென நகர்வகழியின் அடியில் அமைக்கப்பட்டிருந்த உயரமான பகுதியில் கால் அடிபட நடையின் கட்டுப்பாடு தளர்ந்து அதன் புருவங்களுடன் மோதிக்கொண்டோம்.
 
அவ்வளவுதான் முன்னால் சென்றுகொண்டிருந்த குணமதன் சடுதியாகத் திரும்பினான். எங்கள் கைகளை இறுகப் பிடித்து என்ன…? என்ன…? என்று திகைப்புடன் கேட்டவனிடம் அது… இந்தப் புட்டியில் கால் தடக்கிவிட்டது என்று நடந்ததைக் கூறிக்கொண்டோம். தலைக்கறுப்பு மட்டும் தெரியும் போராளிகளை மட்டும் நோக்கியபடி சென்ற எங்களிற்கு இப்போது குணமதன் ஏன் இவ்வளவு திகைப்படைந்திருந்தான் என்பது அடுத்த கேள்வியாகிவிட்டது. இதனைச் சிந்தித்தபடி உடலில் வியர்வையுடன் ஒட்டிக்கொண்ட களத்து மண்ணை மெதுவாகத் தட்டிக்கொண்டோம். அப்போது குணமதன் நான் பயந்து போய்விட்டேன் என்றான் தானாக. எங்களிற்கு எதுவும் புரியவில்லை. ஏன் என்று பதிலுக்குக் கேட்க இல்லை இப்பிடித்தான் அவனும் சினைப் பண்ணுறவன் அதுதான என்றான். அப்படியா? என்றோம் சற்று அச்ச உணர்வுடன். அவன் சொன்னான் எங்கண்ட பொடியள் சிலநேரம் இதுகளுக்குள்ளால வரேக்க அவதானம் இல்லாமல் வருவாங்கள். அந்த நேரம் அவன் எங்கயனும் பாத்துக்கொண்டிருந்திட்டு அடிச்சுப் போடுவான்.
 
 
அதுதான் நான் பயந்துபோனன் என்றான். இப்பவும் சினைப்| பண்ணுறவனா என்று கேட்க நாங்கள் வந்த புதுசில தான் சினைப்பில மாட்டுற சம்பவங்கள் கொஞ்சம் அதிகம். இப்ப பொடியள் எல்லாருக்கும் எப்பிடி நடக்கவேணும் எண்டு தெரியும என்றான். எங்கயும் நாங்கள் மாட்டுவம் எண்டு இப்ப அவன் அலைஞ்சு கொண்டுதான் திரியுறான். ஆனால் தெரியும்தானே அவனுக்கு எங்கட பொடியள் பூச் சுத்துறாங்கள் என்றான்.
 
சினைப்பர்க்; கதையை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டு அதில பொடியள் என்ன செய்து கொண்டிருக்கிறாங்கள்|| என்று எங்கள் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த ஆதங்கத்தை அவிழ்த்துவிட குணமதன் திடீரென என்ன பனிஸ்மன் செய்யிறமாதிரிக் கிடக்குதோ? என்றான்.
 
குணமதனின் திடீர்க் கேள்வி எங்களிற்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. சங்கடத்தின் உச்சத்திற்குச் சென்ற நாங்கள் என்ன பனிஸ்மனா?|| என்று எதுவும் புரியாதவர்கள் போலக் கேட்டோம். நாங்கள் குழம்பிவிட்டோம் என்பதைக் குணமதன் உணர்ந்திருக்க வேண்டும். பனிஸ்மன் ஒண்டும் இல்லை. அவன் அடிச்ச செல் எங்கண்ட மூவிங் றேஞ்சுக்குக் கிட்ட விழுந்திட்டுது. அதுதான் பொடியள் இடிஞ்சு விழுந்த மண்ணை வெளியால கொட்டுறாங்கள் என்றான்.
 
இப்பிடிச் சம்பவங்கள் நடக்கிறதால தேவையில்லாமல் பொயின்ர| விட்டு வெளியால நடமாடவேண்டாம் எண்டு எங்களுக்குக் கட்டளை வந்திருக்குது என்றான். ஒவ்வொரு சம்பவமும் இஞ்ச நடக்க நடக்க அதுக்கெல்லாம் உடன உடன பரிசீலனை நடக்கும். அதுக்குப்பிறகு எங்கழுக்குப் புதுப்புது நடைமுறையள் வந்திடும்|| என்றான்.
 
எங்கள் உரையாடல் நிறைவடைவதற்குள் அந்தப் போராளிகளின் இடத்திற்கு வந்துவிட்டோம். அவர்கள் எங்களைக் கண்டதும் அந்தக் கடுமையான வேலைகளிற்கு மத்தியிலும் ஷஷவணக்கம் என்றார்கள். அவர்களின் உடல் வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது. அவர்களின் உடலில் நீர்க்குமுழிகள் போல நிறைந்த வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் பெறுமதிமிக்கதாய் இருந்தன. 
 
 
களத்தில் இருந்து பல பத்துக் கிலோமீற்றர்களிற்கும் அப்பால் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களின் நின்மதியான வாழ்வினை அந்தப் போராளிகளின் உடலை நிறைத்திருந்த வியர்வைத்துளிகள் உறுதி செய்தவண்ணம் இருந்தன. கனதியான பணியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களின் அருகில் செல்லவும் அவர்களின் வேலை நிறைவடையவும் சரியாக இருந்தது. அவர்களுடன் சிறிதுநேரம் கதைத்து அவர்களின் உணர்வுகளுடன் இணைந்துகொள்வோம் என்ற உணர்வில் செல்ல அவர்கள் தமது காப்பரன்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
 
அண்ணா இதில நிண்டு கதைக்கிறதுக்கு அனுமதியில்லை பிறகு எங்கண்ட பொயின்ரு|க்கு வாங்கோ கதைப்பம் என்று கூறிக்கொண்டு அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்தப் போராளிகளுடன்; சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம்;. ஓரிடத்தில் குணமதன் திடீரென நில்லுங்கோ வாறன் என்று கூறியபடி நகர்வகழியை விட்டு மேல் எழுந்து விடுதலைப்படையின் முன் சவாலாய் இருக்கும் எதிரியின் ஆக்கிரமிப்புப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். எதிரி எங்களின் பகுதியை அவதானிக்க முடியாதவாறு மறைத்து அடைக்கப்பட்ட மறைப்பு வேலியைநோக்கிக் குனிந்தபடி நெருங்கிய குணமதன் அதன் அருகில் சென்று பதுங்கிக்கொண்டான். குணமதனின் திடீர்ச் செயற்பாடு எங்களிற்கு முதலில் ஒருவித குழப்பத்தையே ஏற்படுத்தியது.
 
எதிரியின் நடவடிக்கைகள் எதையாவது அவதானித்திருப்பானா? என்ற சந்தேகம் மெல்ல எங்களிற்குள் எழுந்துவிட குணமதனின் துப்பாக்கியைப் பார்த்தோம். துப்பாக்கி தாக்குதலுக்குத் தயாராவதுபோல் இல்லாது ஒரு கையால் மாத்திரம் பற்றிப் பிடிக்கப்பட்டிருந்தது. 
 
சற்றுநேரம் கழிந்ததும் மீண்டும் நகர்வகழிக்குள் வந்த குணமதன் இதில இருந்து கிட்டத்திலதான் இருக்கிறான் நாங்கள் அடிச்சுப்பிடிக்க வேண்டியவன் என்றான்.
 
காலநேரம் எதுவும் இன்றி அதிர்ந்துகொண்டிருக்கும் முகமாலைக் களத்தில் குந்தியிருக்கும் எதிரியின் காப்பரணைப் பார்த்துவிடும் அவாவில் நாங்களும் பார்க்கலாமா? என்றோம். பிரச்சினையில்லை… என்று இழுத்தவன் சற்றுத் தாமதித்துப் பின் சம்மதித்தான்.
 
மூவிங் ரேஞ்சுக்குள்ள இருந்து எனக்குப் பின்னால நான் போறமாதிரி நீங்களும் வேகமாய் வாங்கோ|| என்ற குணமதன் கண்ணிமைக்கும் பொழுதில் முன்னரங்கின் மறைப்பு வேலிக்குள்போய் நிலையெடுத்துக் கொண்டான். நிலையெடுத்தவன் வேகமாகக் குனிஞ்சுகொண்டு வாங்கோ|| என்றுகூற நாங்களும் அவன் காட்டிய மறைப்பிடத்திற்குள் பாய்ந்தோம். 
 
குணமதன் எதிரியின் பக்கம் நோக்கித் தீவிரமாக அவதானித்தபடி தனது துப்பாக்கியைச் சுடும் நிலையில் வைத்துக்கொண்டு எங்களிற்குக் களநிலை பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான். அவனின் பார்வைக்குள் எதிரி சிக்கிக் கொண்டால் நிச்சயம் தொலைந்திருப்பான். அவ்வளவிற்குக் குணமதனின் முகபாவனை மிகவும் ஆவேசமாகவும் உன்னிப்பாகவும் இருந்தது. திடீரென்று எங்கள் பக்கம் திரும்பியவன் எதிரியின் நடமாட்டங்கள்; இருப்பதாகத் தெரியவில்லை நீங்கள் பாருங்கள் என்றான்.
 
நாங்களும் போராளிகளின் வீரத்தில் திளைக்கும் புனித பூமியில் இருந்துகொண்டு மறைப்பு வேலிகளின் இடைவெளிகளினூடு ஆக்கிரமிப்பு நிலத்தை அவதானித்தோம். அது ஒரு விசப்பரீட்சை போல எங்களிற்குத் தோன்றினாலும் அந்தச்சூழல் எங்களை அப்படியான செயலை செய்யத் தூண்டியிருந்தது.
 
ஆனையிறவைக் கைப்பற்றும் பேரவாவின் உச்சியில் நிற்கும் எதிரியின் பெருந்தளத்தின் முகப்பு வேலி நாயுண்ணிச் செடிகள் நிறைந்த பறட்டைப் பற்றைகளிற்குள்ளால் எங்களின் விழித்திரையை நிறைத்துக்கொண்டிருந்தது. சூனியப் பிரதேசத்தை ஊடறுத்து எங்கள் பார்வைசெல்ல பச்சை வர்ணம் பூசப்பட்ட தகரம் மாத்திரம் தெரிந்தது.
 
அதுதான் யாழ்.குடாவை ஆக்கிரமித்திருக்கும் சிங்களத்தின் முன்னணி ஆக்கிரமிப்பு நிலை. இந்த முன்னணி ஆக்கிரமிப்பு நிலைகளிற்குப் பின்னால் நடைப் பிணங்களான எங்கள் மக்களின் இருள் மண்டிய துயரவாழ்வின் தொடர்கதை இருக்கிறது. தினமும் சாவிற்குள் வதைபடும் பல்லாயிரம் மக்களின் எண்ணங்களை நினைவில் சுமந்தபடி ஆக்கிரமிப்பு நிலைகளை உற்றுநோக்கினோம்.
 
களத்தில் போர் முகம் தொடரும்…..