• :
  • :
களத்தில்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பது பெரிய விஷயம் இல்லை....

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பது பெரிய விஷயம் இல்லை....

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பது பெரிய விஷயம் இல்லை....

அரசாணை வெளியிடுவதும் அதை அரசே மதிக்காமல் நடப்பதும் இயல்பானதே... 
 
அந்த ஆலையை இடித்து சுவடே இல்லாமல் ஆக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும்... 
 
வேடந்தா இனி எங்கேயும் கால் பதிக்க முடியாத அளவுக்கு எதிர்ப்புகள் வலுக்கட்டும்...! 
 
ஸ்டெர்லைட்: இழுத்து மூட தமிழக அரசாணை - இது முழுத் தீர்வாகுமா..?!
 
தமிழக அரசாணை மக்கள் கொந்தளிப்பை, தூத்துக்குடி தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் ஒருவித குளிர்ச்சித் தோட்டாவாகவும், அரசியல் அதிகாரமற்ற சூழலில் பா.ஜ.க அரசை நோக்கி அதிமுக எடுபிடிகளால் ஏவப்பட்ட பனிப்போர் ஆயுதமாகவும் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
 
இந்திய அரசும், நீதி மன்றமும் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்க முடியும். அவை யாருக்கானவை என்பது அரசியல் அறிந்தோர்க்கு மீண்டுமொரு படிப்பினை... அறியாதோர்க்கு ஒரு அரிச்சுவடி.
 
அறுதியிட்டு செய்ய வேண்டுவன:
 
இந்திய அரசும், நீதிமன்றமும் ஏற்றுக்கொள்கிற / தலையிட முடியாத தெளிவான சட்ட பூர்வ ஆணையா இது என்பதை ஆய்வு செய்தல், இல்லையேல் அதற்கொப்ப கொள்கை முடிவெடுத்தல்
 
இழுத்து மூடல், கழிவுகளை அகற்றல், தொழிற்சாலை கட்டமைப்புகளை, இயந்திரங்களை காலி செய்தல், இடத்தை அரசுடமையாக்கி புனரமைத்தல் என காலவரையறையுடன் கூடிய செயல் திட்டம் வலியுறுத்தல்
 
தொழிற்சாலை இருந்த இடத்தில் ஒரு பசுமைப் பூங்காவை உருவாக்கி இவ்வளவு நாள் நச்சுப்புகையில் வாழ்ந்த மக்களுக்கு இளைப்பாறும் ஒரு வசந்த சூழலை உருவாக்குதல்
 
முதன்மையாக இடத்தின் மையத்தில் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தோர்க்கு ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் அமைத்தல்
 
இன்னும் முதன்மையாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய / ஆணையிட்ட அதிகார மிருகங்கள் தண்டிக்கப்பட ஆவன செய்தல்
 
குறைந்தபட்சம் இவையெல்லாம் நடந்தால்தான் தூத்துக்குடி மக்கள் போராடி / உயிர்ப்பலிக் கொடுத்துப்பெற்ற வெற்றி முழுமையடையும்.