• :
  • :
களத்தில்

எச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை || வைரமுத்து விற்கு ஆதரவு

எச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை || வைரமுத்து விற்கு ஆதரவு

சென்னை: ஆயுதத்தை மறந்து விட்டோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை என்று எச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா மிகக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுதான் பாரதிராஜாவின் கடுமையான எச்சரிக்கை அறிக்கை: