• :
  • :
களத்தில்

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் முதல் நாளை ஆண்டு தோறும் தொடர்ந்து கொண்டாட தமிழக அரசு முன்வரவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1967-ம் ஆண்டு நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் 50-வது ஆண்டையொட்டி தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

சங்க காலத்திலிருந்து 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழிவழியாகத் தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை தமிழகம் ஒரே நாடாக விளங்கியதில்லை. எனவே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் முதல் நாளை ஆண்டு தோறும் தொடர்ந்து கொண்டாட தமிழக அரசு முன்வரவேண்டும். பிற மாநிலங்களில் அவை உருவான நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நாமும் அவ்வாறு கொண்டாட ஆவன செய்ய வேண்டும்'' என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.