• :
  • :
களத்தில்

இந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம்...!

இந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம்...!

இந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம் !!

 
திருச்செந்தூர் செல்லும் வழியில், தூத்துக்குடியில் உள்ளது, ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு ஆலை) ஆலை. இந்த ஆலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கபடாமல் விரட்டி அடிக்கப்பட்டு, இளிச்சவாய் தமிழர்கள் உள்ள, கேட்பார் கேள்வியற்ற தமிழகத்தில் வந்து புகுந்துள்ளது இந்த ஆலை. [ ஸ்டெர்லைட் மட்டும் அல்ல ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணு உலை போன்ற பல ஆபத்துகள் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படாமல் தமிழகம் வந்தவையே. மொத்தத்தில் தமிழகம் ஒரு குப்பை தொட்டி ]
 
இதில் இருந்து வெளிவரும் புகையை தினந்தோறும் சுவாசிக்கும் மக்கள் புற்று நோய், சுவாச கோளாறுகள் உட்பட பல வியாதிகளுக்கு ஆளாகி வருகின்றன. பெண்களுக்கு மலட்டு தன்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு என்று பல ஆபத்துகளை இந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த மக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் கழிவுகள் கடலில் கலப்பதால், கடல் வளம் பறிபோகிறது. நிலத்தடி நீர் மாசாகிறது.
 
நாளுக்கு நாள் இந்த ஆலையின் ஆபத்து, அதிகரித்து வரும் நிலையில், இப்போது, தூத்துக்குடி மக்கள் ஒன்றுதிரண்டு களத்திற்கு வந்து போராட துவங்கி உள்ளனர். 
 
[ போராட்டங்கள் செய்யவில்லை என்றால் 5 வருடத்தில் சொந்த ஊரை காலி செய்ய வேண்டும்... 11முறை ஓட்டு போட்டு ஏமாந்தும் இன்னும் இந்த அரசியல் வாதிகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களை என்ன சொல்வது ]
 
தமிழகத்தில் நடக்கும் இயற்கைவள கொள்ளைப் பற்றியோ,
நில அழிப்புப் பற்றியோ உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதே இல்லை.
நீங்களாக முயற்சி செய்தால் மட்டுமே தமிழக அரசும்,இந்திய அரசும்
நம்மை எத்தகைய கையறு நிலைக்கு தள்ளி உள்ளது என்பதனை உணர முடியும்,
 
தமிழக அரசு சமீபகாலத்தில் 50 அனல் மின் நிலையங்கள் தொடங்க
ஒப்புதல் அளித்துள்ளது, இவை அனைத்தும் தமிழகத்தின்
கடற்கரை மாவட்டங்களில் அமையவுள்ளன,
 
#திருவள்ளூரில்-10 அனல்மின் நிலையம்
#தூத்துக்குடியில்-21. அனல் மின் நிலையம்
#காஞ்சிபுரத்தில்-01 அனல்மின் நிலையம்
#கடலூரில் ---10 அனல்மின்நிலையம்
#நாகப்பட்டிணத்தில்-08 அனல்மின் நிலையம்,
 
மொத்தமாக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த 50
அனல்மின் நிலையங்களும் செயல்பட துவங்கிவிடும்,
இவற்றின் மொத்த மின் உற்பத்தித்திறன் -34510 MW. (மொகாவாட்கள்)
 
இதில் #TANGEDGO வின் அனல்மின் நிலையங்கள் 11 மட்டுமே.
 
இதன் மின்உற்பத்தி அளவு வெறும் #7640 MW மட்டுமே.
மீதமுள்ள 39 #தனியார்அனல்மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள #26870MW ( மெகாவாட்) யாருக்காக?
 
தமிழகத்தின் தற்போதைய மொத்த மின்தேவை #13500MW - முதல் #15000MW
மட்டுமே ,தற்போது தமிழகத்தின் மின் உற்பத்தி போதுமானதாக உள்ளநிலையில் இத்தனை அனல் மின்நிலையங்கள் யாருக்காக?
 
அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியானது ஆகாயத்தில் இருந்து கொட்டப்போவதில்லை, அவை தமிழகத்தின் காவிரிப்படுகையில் உள்ள மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களைவிட்டு அடித்துத் துறத்திவிட்டே எடுக்கப் போகிறார்கள்,
 
அனல்மின் நிலையங்களில் வெறும் நிலக்கரியைக் கொண்டு மட்டுமே மின் உற்பத்தி செய்து விடமுடியாது, 
1யூனிட் (Unit )மின் உற்பத்திக்கு #17 லிட்டர் நீர் தோராயமாக தேவைப்படுகிறது, அப்படியானால் 34510 MW( மெகாவாட்) உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள், பிரச்சனை இத்தோடு முடியவில்லை உற்பத்திசெய்யப்பட்ட மின்சாரமானது தமிழக விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைத்து புதிய மின்வழிதடங்கள் உருவாக்கப்பட்டு கொண்டுசொல்லப்படும், இதன் மூலம் சில ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இழக்க உள்ளோம்
 
வருங்காலத்தில் மொத்த தமிழகமும் அசுத்தக் காற்றால் சூழப்பட்டு, மொத்த தமிழகமக்களும் நிலத்தடி நீரே இல்லாமல் விவசாயத்தை கைவிட்டு குடிக்கக்கூட தண்ணீரிக்கு வழியின்றி சொந்த வாழ்விடங்களைவிட்டு நாடோடிகளாய் மாறப்போகிறோம் என்பதே உண்மை,
 
#இந்தியாவின் வளர்ச்சிக்காக மொத்த தமிழகமும் #சுடுகாடாக மாறிவருகிறது
என்பதே கசப்பான உண்மை.