• :
  • :
களத்தில்

தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்

தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை 05.06.1974 அன்று சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் ‘சயனைட்’ அருந்தி தமிழீழ விடுதலைக்காய் தன்னுயிர் நீத்த முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
 
தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட தியாகி…..
 
 
நஞ்சை படைக்கலாம் ஆக்கிய முதல் போராளி
 
தமிழீழ விடுதலைக்காக நஞ்சுண்டு உயிர் நீத்த முதல் மாவீரன். லங்கை அரசின் கல்வி தரப்படுத்துதல் கொள்கைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர். 1970களின் தொடக்கத்திலேயே சிங்கள அரசின் கைக்கூலிகளுக்கு எதிராக இரண்டு ஆயுதத் தாக்குதல்களை நடத்தியவர். அதற்காக கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர். சிறையிலிருந்து மீண்ட பின், பிறிதொரு தாக்குதலை நடத்த முற்பட்ட போது, சுற்றி வளைத்த சிங்கள இராணுவத்திடம் பிடிபடாமல் இருக்க சயனைட் நஞ்சருந்தி வீரச்சாவு.
 
இவரது சாவு பல இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி எழுச்சியுடன் வரச் செய்தது. இவரது குண்டுத் தாக்குதலுக்குத் தப்பி உயிர் பிழைத்த ஆல்பிரட் துரையப்பாவை 1975ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொன்ற நிகழ்வே, தேசியத் தலைவரை மக்களிடையே முதன் முதலாக புகழ் பெற வைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். சிவகுமாரன் வீரச்சாவு அடைந்த நாள் “தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக” நினைவு கொள்ளப்படுகிறது.
 
* எமது விடுதலைப் போராட்டத்துக்கு கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
 
 

நீளும் நினைவுகளாகி….

 
 
 
 
 
 
 
எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்களுக்கும் , நாட்டுப்பற்றாளர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்கின்றோம்.
 
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

அலசல்