• :
  • :
களத்தில்

முள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்படுகொலை நாள் - மே 18

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நாள் -  மே 18

 
மே 18 , எம் இன வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். எம் மக்கள் கொத்துக்கொத்தாய் சிங்கள வெறி ராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் ரத்தம் ஈழமெங்கும் வழிந்தோடி இந்தியக் கடலில் கலந்து சிவந்த நாள். அரை நூற்றாண்டு கால வெஞ்சமர் கணட தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்பட்டநாள்.
 
இன அழிப்பின் உச்ச கட்டக் கொடூரமாய் முள்ளிவாய்க்காலில் தடைசெய்யப்பட்ட குண்டுவீச்சால்  குற்றுயிரும் குலையுயிருமாக துடித்த எம்மக்கள் பல்லாயிரம் பேரை மண்ணோடு மண்ணாய் ஒரே நாளில் புல்டோசர் கொண்டு அழித்து முடித்தநாள்.அன்று, எம் மக்களின் மரண ஓலம் உலகின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.
 
எம் இனம் மொத்தமாய் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட போதும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது உலகம். மனித உரிமை, சர்வதேச நெறிமுறை என்று அனைத்தையும் இனத்தோடு சேர்த்துப் புதைத்து சிரித்துக் கூத்தாடியது சிங்கள இனவெறி அரசு.இருந்தும், எஞ்சிய எம் இனம் வீழ்ந்து விட வில்லை. துயரத்தில் ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. எமக்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு ஓயாத போராட்ட்த்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுத்தனர். 
 

அலசல்